இயக்க பற்றும் குருட்டு பக்தியும்
இயக்கப் பற்றும் குருட்டு
பக்தியும் சிறு அலசல்
★ J . யாஸீன் இம்தாதி ★
22-11-15
--------------------------------------------------------------
Bismillahir Rahmanir Raheem
=================
இந்திய அளவில் இறையருளால் இஸ்லாமிய எழுச்சி கேரளாவிலும் தமிழகத்திலும் தான் அதிகம்
அதே நேரம் மார்க்கத்தின் பெயரால் அன்றாடம் சர்ச்சைகளும் இங்கு தான் அதிகம் நடை பெற்று வருவது இந்த சமூகத்திற்க்கு பிடித்த சாபக்கேடாகும்
உலக சர்ச்சைகளுக்கு தீர்வு தரும் இஸ்லாத்தை பெற்றிருந்தும் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கு தீர்வை அடையாமல் இருப்பதற்க்கு மூல காரணமே
அவர்கள் தான் சார்ந்த இயக்கங்களின் மீதும் அல்லது தனிமனிதர்களின் மீதும் அறியாமையாலும் மார்க்கத்தின் பெயராலும் வைத்துள்ள குருட்டுத்தனமான பக்தி தான் அடிப்படை காரணம் ஆகும்
நீங்கள் நல்லது என்று கருதுகின்ற ஒரு இயக்கத்தின் மீதோ அல்லது தனிமனிதர்களின் மீதோ முறையான பற்று வைத்தால் அந்தப் பற்று உங்களை நன்மையின் பாதைக்கே அழைத்து செல்லும்
அதே நேரம் பித்தையும் குருட்டு பக்தியையும் வைத்திருந்தால் நிச்சயம் அந்த குருட்டு பக்தி உங்களை வழி கெடுப்பதோடு சமூகத்தில் பல குழப்பங்களையும் ஏற்படுத்தும் நம் தமிழகத்தை உற்று நோக்கினால் அது எற்பட்டும் உள்ளதை மறுக்க முடியாது
அதன் விளைவு தான் நான் இவருக்கு சலாம் சொல்ல மாட்டேன் அவருக்கு சலாம் சொல்ல மாட்டேன் என்ற கீழ் நிலை நடத்தைகளின் வெளிப்பாடு சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது
சுன்னத் ஜமாத்தில் அங்கம்
வகிக்கும் ஒரு சகோதரர்
சுன்னத் ஜமாத் கொள்கையில் மார்க்கம் அங்கீகரிக்காத ஒன்று இருப்பதாக கருதி
அதை சந்தேக கேள்வியாக சுன்னத் ஜமாத் இமாம்களிடம் கேட்டால் கூட அவரையும் வஹ்ஹாபி என்று முத்திரை குத்தி ஓரங்கட்டப்படும் சூழல் இருக்கின்றது
அதே போல் ஏகத்துவவாதிகளாக இருக்கும் நபர்களும் இதே போல் நடந்தால் அவர் சுன்னத் ஜமாத்தை அங்கீகரிப்பவர் என்று முத்திரை குத்தி ஓரம் கட்டப்படும் சூழலும் சமூகத்தில் உள்ளது
சுருங்கச் சொன்னால் இயக்கத்தை சார்ந்த ஒருவர் அந்த இயக்க பைலாவிற்க்கு மாற்றமாக நடந்தால் அவர் சரியான இஸ்லாத்தை பின்பற்றுபவர் அல்ல என்றே ஒவ்வொரு சாராரின் நடவடிக்கையாக அமைந்து விட்டது
காரணம் இதற்க்கு பின்னனியில் இருப்பது இயக்கத்தின் மீதும் தனி மனிதர்களின் மீதும் கொண்டுள்ள பற்று இல்லை
மாறாக குருட்டு பக்தி தான் மார்க்கத்தின் பெயரால் பலர்களிடம் குடி கொண்டுள்ளது
+++++++++++++++++++++
குருட்டு பக்தியின் அளவு கோள் ?
*************
1-சத்தியம் இது தான் என்று தெரிந்தும் அல்லது இயக்கம் முடிவு செய்த ஒன்றை விட இது தான் சிறந்தது என்று தெரிந்தும்
அந்த இயக்கத்தின் பைலாவிற்காகவும் தலைவர்களுக்காகவும் இதர இயக்க நண்பர்களின் முகத்தாட்சணைகாகவும்
சத்தியம் என்று அறிந்த ஒன்றை மறைத்தாலோ அல்லது மழுங்கடித்தாலோ அதுவும் ஒரு வகை குருட்டு பக்தி தான்
2-குர்ஆன் ஹதீஸ் சான்றுகளோடு ஒரு இயக்கமோ அல்லது தனி நபரோ பேசிய அல்லது எழுதிய ஆதாரங்களை எடுத்து வைத்து வாதிக்கவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ முனையலாம் இது தவறில்லை
அதே நேரம் அந்த கருத்தை வலுபடுத்துவதற்கு அவர்கள் கூறிய அதே உதாரணங்களை அதே பாணியில் அந்த இயக்கத்தை சார்ந்த அனைவருமே ஒரே வடிவத்தில் கூறி பிரதிபலிப்பதும் கூட ஒரு வகை குருட்டு பக்தியாகும்
3- தான் எந்த இயக்கத்தில் உள்ளார்களோ அந்த இயக்கத்தின் பணிகளில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு
அதே பணியை வேறு ஒரு இயக்கம் செய்யும் போது அந்தப் பணிக்கு தனது பங்களிப்பை தரக் கூடிய சூழலைப் பெற்றிருந்தும் அந்தப் பணியிலிருந்து விலகி இருப்பதும்
அவர்களின் பணியை குறைத்து மதிப்பீடு செய்வதும் ஒரு வகை குருட்டு பக்தி தான்
4-தான் அங்கம் வகிக்கும் இயக்க கூட்டங்களுக்கு செல்லும் போது நல்லவற்றை கூறினால் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையோடு செல்லும் ஒருவர்
அவர் அங்கம் வகிக்காத இயக்கம் அல்லது மார்க்க கூட்டங்களுக்கு செல்லும் போது அவர்கள் ஏதாவது ஒரு விசயத்தில் நம்மிடம் சிக்குவார்களா ? என்ற தாழ்வு சிந்தனையோடு செல்வதும்
குறைகளை கண்டு பிடித்து அதை பொதுமக்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தி இழிவு செய்ய வேண்டும் என்ற சிந்னையோடும் கேமராவோடும் ரிகார்டோடும் அலைவதும் ஒரு வகை குருட்டு பக்தி தான்
5-தான் அங்கம் வகிக்கும் இயக்கத்தில் ஒருவர் ஒரு தவறை செய்து பிடிபடும் போது
அதை கண்டிக்க மென்மையை கடை பிடிப்பதும் பிற இயக்கத்தவர்கள் அறியாத விதத்தில் அதை மூடி மறைப்பதும் அதே தவறை பிற இயக்கம் செய்யும் போது அதை கண்டிக்க அநாகரீகமான போக்கை கடை பிடித்து கடுமையை காட்டுவதும் ஒரு வகை பக்தி தான்
6-குர்ஆன் ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் என்று ஓரளவு மேலோட்டமாக புரிந்த காரணத்தால்
சர்ச்சைக்குரிய ஒரு விடயத்தில் சத்திய சஹாபாக்கள் கண்ணியம் நிறைந்த இமாம்கள் ஹதீஸ் கலை வல்லுனர்கள் அதைப் பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் என்று ஆராய முற்படாமலும் அவ்வாறு அவர்களின் கருத்தையும் ஆய்வு செய்து ஒருவர் ஒரு முடிவை சொல்கிற பொழுது
அவர்கள் என்ன அல்லாஹ்வின்
தூதர்களா ?
அல்லது அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கின்றானா ?
என்று அதி மேதாவிகள் போல் பேசுவதும் ஒரு வகை தனது அறிவின் மீது வைத்துள்ள குருட்டு பக்தி தான்
7- இஸ்லாம் சொல்லும் விதத்தில் சிந்தித்து அதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களையும் சமர்பித்து ஒரு விசயத்தில் ஒரு இயக்கம் சார்ந்தவர் நல்ல முடிவை சொல்லும் போது அதை நடு நிலையோடு ஏற்பதை விட்டு விட்டு இந்தக் கருத்தை நான்கு கண்ணியமிக்க மத்ஹப் இமாம்கள் சொல்லியுள்ளார்களா?
அவர்கள் சொல்லாத ஒன்றை நீ சொல்வதற்க்கு உனக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று அறியாமை வாதம் பேசி ஏதோ சிந்திக்கும் அறிவு அந்த நான்கு மத்ஹப் இமாம்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்பதைப் போலவும் சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்குப் பின்னால் தனக்கும் வேறு எவருக்கும் இல்லை என்பதைப் போல் பேசுவதும் அவர்கள் தாங்கள் இமாம்களாக மதிக்கும் இமாம்களின் மீது வைத்துள்ள ஒரு வகை குருட்டு பக்தி தான்
இது போல் உள்ள ஒருவர் இறைவன் தனக்கு வழங்கிய அறிவை கூட சரியான முறையில் பயன் படுத்த தெரியாதவர் என்றே தன்னை காட்டி கொள்கிறார்
அதே நேரம் ஒரு சாரார் மீதும் அல்லது ஒரு இயக்கத்தின் மீதும் நீங்கள் முறையான பற்று வைத்தால்
உங்கள் அறிவையும் சரியாக
பயன் படுத்துவீர்கள்
மேலும் மறுமையில் வெற்றியும் அடைவீர்கள் ! ! !
இன்ஷா அல்லாஹ் பாரகல்லாஹ்
ﻭَﻗُﻞ ﻟِّﻌِﺒَﺎﺩِﻱ ﻳَﻘُﻮﻟُﻮﺍ ﺍﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ۚ ﺇِﻥَّ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻳَﻨﺰَﻍُ ﺑَﻴْﻨَﻬُﻢْ ۚ ﺇِﻥَّ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻛَﺎﻥَ ﻟِﻠْﺈِﻧﺴَﺎﻥِ ﻋَﺪُﻭًّﺍ ﻣُّﺒِﻴﻨًﺎ
17:53. (நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக!
நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையி
ல் (தீயதைத் தூண்டி) விஷமம் செய்வான்
நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்
ﻭَﻣَﻦْ ﺃَﺣْﺴَﻦُ ﻗَﻮْﻟًﺎ ﻣِّﻤَّﻦ ﺩَﻋَﺎ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻋَﻤِﻞَ ﺻَﺎﻟِﺤًﺎ ﻭَﻗَﺎﻝَ ﺇِﻧَّﻨِﻲ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴَ ﴿ 41:33 ﴾
41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து
“நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ அவரை விட சொல்லால் அழகியவர் யார்? (இருக்கின்றார்?)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment