முஸ்லிம் என்ற வார்த்தை தான் அடையாளம்

           இஸ்லாமே நம் மார்க்கம்

                முஸ்லிம் என்பதே
                  நம் அடையாளம்

       <><><><><><><><><><><><><><>
                       10-01-2017
             கட்டுரை  எண்  1061
              -----------------------------
           J. யாஸீன் இம்தாதி
                   !+++++++++!
    Bismillahir Rahmanir Raheem
           !! -------------------------------!!
       
நான் தவ்ஹீத்வாதி  நான் சுன்னத் ஜமாத் நான் காதியானி நான் சலபு சாலிஹீன்

இவ்வாறு தங்களை அடையாளப்படுத்தி  கொள்வது பலர்களுக்கு  மகிழ்ச்சியாகவும் வேறு பலர்களுக்கு வெறுப்பாகவும் நம் சமூகத்தில் பரவலாக பார்க்கப்படுகின்றது 

இதற்க்கு மூல காரணம் முஸ்லிம்களின் இந்த சொல்லாடலே தவிர இஸ்லாம் அல்ல

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ அவர்களுக்கு முன் வந்த நபிமார்களோ இந்த சொற்றொடர்கள் மூலம் தங்களை அறிமுகம் செய்ததும் இல்லை பிறர்களை அவ்வாறு பெயர் சூட்டி அழைத்ததும் இல்லை

உங்கள் ஊர் எது என்று பிறர்கள் வினவினால் உங்கள் ஊரை சொல்லி நீங்கள் உங்களை அறிமுகம் செய்வீர்களே தவிர

நீங்களாகவே பேசும் போதெல்லாம் நான் இந்த ஊரை சார்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு இருக்க மாட்டீர்கள்

காரணம் அடையாள பெயர்கள் வேறு அறிமுக பெயர்கள் வேறு தனிப்பட்ட பெயர்கள் வேறு

இஸ்லாமிய நம்பிக்கையை ஏற்றுள்ள சமுதாயத்தை பொறுத்தவரை  அவர்களுக்கு இஸ்லாமே சூட்டி உள்ள பெயர் 

!! முஸ்லிம்   முஸ்லிம் முஸ்லிம் !!

                  என்பது மட்டுமே

இதில் புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களை பலர்கள்

            !!நவ முஸ்லிம்கள் !!

அதாவது புதிய முஸ்லிம்கள் என்று அழைப்பதையும் பார்க்கிறோம்

இது போன்ற சொற்றொடர்களாலும் நபி( ஸல்) அவர்கள் காலத்தில் யாரும் அழைக்கப்பட்டது இல்லை

சுருங்க சொன்னால்  நபியவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற அனைவருமே நம் பார்வையில்
நவ முஸ்லிம்களாகவே தான் இருந்தார்கள் 

ஆனாலும் அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டது இல்லை காரணம் என்ன ?

ஒரு சாராரின் சொல்லாடலை மட்டும் வைத்து கொண்டு அவரது செயலை தூய்மையானது என்று எவராலும் சொல்ல முடியாது

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே போதும் என்று சொல்வோரிலும் வட்டிக்கு துணை போவோரும் சமூக கொடுமையான  வரதட்சணைக்கு அடிமை பட்டவர்களும் கனிசமாக இருக்கவே  இருக்கின்றனர்

சுன்னத் ஜமாத் ( சுன்னத்துகளை மட்டும் பின்பற்றுவோர்) என்று பெயர் சூட்டிக் கொண்டு காலம் காலமாக நம் சமூகத்தில்  நிலவி வரும் பல பித்அத்துகளை சுன்னத்துகளாக கருதி தப்பு பிரச்சாரம் செய்வோரும் உள்ளனர்

பிறர்களிடம் இருந்து உங்களை தனித்து காட்ட பெயர்களை மாற்றி சூற்றுவதில் பெருமை கொள்ளாமல் இறைவன் நமக்கு சூட்டிய முஸ்லிம் எனும் பெயரை கொண்டு ஒருவரை ஒருவர்  அழைப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்

நிர்வாக அமைப்புக்கும் அரசியல் ரீதியான தொடர்புக்கும் மட்டுமே தங்களை தனியாக  காட்டுவதில் குற்றம் இல்லை

மாறாக அது போல் பெயர் மாற்றங்கள் இருப்பது தான் பலரது தவறான நடவடிக்கைகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ளவும் தனித்து விளங்கவும்  முடியும்

அதே நேரம்  ஒரு சாராரின் பெயரை தனது அடையாளமாக காட்டுவதின் மூலம் அவர் நம் கொள்கையை சார்ந்தவர் என்றோ அல்லது நம் கொள்கைக்கு எதிரானவர் என்றோ முடிவுகளை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்

அதுவே நம் சமுதாயத்தை பிரிக்கும் பாலமாகவே அமைந்து விட்டது

     !! நஊது பில்லாஹி மின்ஹா !!

وَوَصَّىٰ بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَىٰ لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ  ﴿2:132﴾

இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார் யஃகூபும் (இவ்வாறே செய்தார்) அவர் கூறினார்

என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ  ﴿3:102﴾

3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள் மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்

وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ الْمُسْلِمِينَ  ﴿39:12﴾

அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக)

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ  ﴿41:33﴾

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?   

              நட்புடன்  J . இம்தாதி

Comments

  1. முஸ்லிம் என்பதே
    நம் அடையாளம்

    பதிவு மிகவும் அருமை ஜஷக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்