அழகிய பெண்கள் யார்

உண்மையான உலக அழகிகள்
                           யார் ?

        ^======================^

     19-11-2017 கட்டுரை எண் 1163
               -----------------------------
            J. யாஸீன் இம்தாதி
                     !+++++++++!
    !! Bismillahir Rahmanir Raheem !!
              !! -------------------------------!!

19-11-17 அன்று வெளியிடப்பட்ட ஊடக செய்திகளில் முக்கிய இடம் பெற்றுள்ள செய்தி உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் என்பவரை பற்றிய தகவலாகும்


மிஸ்வேர்ல்ட் எனும் உலக அழகு போட்டி சீனாவில் சான்யா சிட்டியில் நடைபெற்றது

இதில் 108 நாடுகளில் இருந்து பங்கு பெற்ற பெண்களில் இந்தியாவில் இருந்து பங்கு பெற்ற இருபது வயதான மனுஷி சில்லர் எனும் பெண் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்திய பெண் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டது ஏதோ இந்திய திருநாட்டிற்க்கு சுதந்திரம் கிடைத்ததை போலவும் அந்த பெண் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்பதை போலவும் சில மாதர் சங்கங்கள் பூரிப்படைந்து கொண்டாடுவதை பார்க்க முடிகிறது

பேசப்படும் அனைத்து மொழிகளிலும் அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படும் ஓர் வார்த்தை அழகு

அழகு என்பது ஒவ்வொரு மனிதனின் ரசனைக்கும் வேறு பட்டும் மாறு பட்டும் இருக்கும்

ஒருவரின் கண்ணுக்கு அழகு போல் புலப்படும் ஒன்று மற்றவர்களின் கண்ணுக்கும் அழகாக தான் காட்சியளிக்கும் என்றில்லை

ஆனால் அது போல் தான் அனைவரின் கண்களுக்கும் காட்சியளிக்கும் என்ற ஒரு பொய்யான பிரம்மையை உருவாக்கி அதன் மூலம் பல லட்ச கோடிகளை ஈட்ட 1951 ம் ஆண்டு ஆடவர்களால்  உருவாக்கப்பட்டதே

      உலக அழகி எனும் பட்டம்

பெண்ணை போகப்பொருளாக ஆக்கி அவளை அரைகுறை ஆடையோடு பொது மேடையில் ஒழுங்கீனமாக நடக்க வைத்து அவளது உடல் உறுப்புகளின் அங்க அசைவுகள் மற்றும் அவளின் நிறங்களை ரசித்து பார்த்து அந்த கீழ்த்தரமான ரசனைகளுக்கு மதிப்பெண் கொடுத்து அதில் வெற்றி பெறும் பெண்ணுக்கு தலையில் கிரீடம் அணிவித்து கவுரவ படுத்துவதே உலக அழகி எனும் பட்டம் ஆகும்


முகத்தில் தடவும் க்ரீம்கள் மெருகூட்டும் பவுடர்கள் ஆகியவைகளை விளம்பரங்களாக காட்டி

எனது அழகிற்க்கு இது தான் மூல காரணம் என்றும் தனிப்பட்ட விளம்பர படங்களில் நடித்தும் பாமரர்களை ஏமாற்றி பணம் சம்பாரிப்பதிலும் உலக அழகி பட்டம் வென்றவர்கள் தான் உலகளவில் முன்னனியில் இருக்கின்றனர்

உலக அழகி என்ற பட்டத்தை பயன்படுத்தி தவறான முறையில் கோடீஸ்வரர்களுக்கு சில காலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேசித்தனம் செய்வோரும் உலக அழகிகளில் அதிகம் உண்டு

அதன் மூலம் எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டு நாதியற்று நாற்றம் பிடித்த நிலையில் மரணத்தை தழுவியவர்களும் உண்டு

தனது அறிவாலும் திறமையாலும் பிறர்களின் கவனத்தை ஈர்ப்பதை விட தனது கவர்ச்சியை காட்டியும் அழகை காட்டியும் ஆடவர்களை ஈர்ப்பதே தற்காலத்தில் அநேகமான பெண்களின் இயல்பாக மாறி போனது

ஆடம்பர வாழ்கைக்கு ஆசைபட்டு மானத்தை இழந்து தன்னை போக பொருளாகவே வெளிரங்கத்தில் காட்டி கொள்ளும் தன்மை கொண்டவர்கள் உண்மையில் உலக அழகிகள் அல்ல

உலகிலேயே அவர்கள் தான் ஒழுங்கீனத்தின் முன்னோடிகள்

அப்படியானால் உண்மையான உலக அழகிகள் யார் ?

கட்டிய கணவன் வேலையை முடித்து வீடு திரும்பும் போது அவனை இன்முகத்தோடு வரவேற்று அவனது சுக துக்கங்களில் பங்கு பெற்று ஆறுதல் கூறும் தாயாக விளங்கும் பெண்களே உண்மையான உலக அழகிகள்


ஆடம்பர வாழ்கைக்கு அடிமை படாமல் கணவனின் வரவுக்கு ஏற்ற செலவுகளை செய்யும் சாந்த குணம் படைத்த மனைவிமார்களே உண்மையான உலக அழகிகள்


பெற்றோர்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் வேலை பளுவை குறைத்து வீட்டை தூய்மையாக வைக்கும் இளம் பெண்களே உண்மையான உலக அழகிகள்

மருமகளை மகளாக கணித்து மாமியாவை தாயாக கணிக்கும் திருமகள்களே உலகில் உண்மையான உலக அழகிகள்

தனது சீரிய பண்பாடுகளாலும் ஒழுக்க நடைமுறைகளாலும் தன்னையும் தனது வம்சத்தையும் வார்த்தெடுக்கும் பெண்களே உண்மையான உலக அழகிகள்

ஒரு விதத்தில் இப்பதிவு சுதந்திரத்தின் பெயரால் சுற்றி சீரழியும் பெண்களுக்கு மன வருத்தத்தை தந்தாலும் அவர்களின் சீரழிவை கண்டு ரசிக்கும் ஆடவர்களே முதல் வகை அயோக்கியர்கள்

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏ 

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான் அவர்

இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!

இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்

          (அல்குர்ஆன் : 66:11)

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتيَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது

இன்னும் தங்கள் முன்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்

மேலும் (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகை வெளிப்பத்தும் விதமாக தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்

மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்

            (அல்குர்ஆன்  24:31)

            நட்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்