விரோதங்களுக்கு இஸ்லாமே தீர்வு
விரோதங்களுக்கு இஸ்லாமே
!! தீர்வு !!
08-02-2017
கட்டுரை எண் 1068
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
உலகில் வாழும் மனிதர்களில் எவருக்குமே நண்பர்களும் இருப்பார்கள் விரோதிகளும் இருப்பார்கள்
ஒருவரை நண்பராக நாம் தேர்வு செய்தால் அவர் மூலம் பல நல்ல வெளிப்பாடுகளை பார்த்தோ அல்லது பிறர்கள் மூலம் அவரை பற்றிய நல்ல பல தகவல்களை கேள்விபட்ட அடிப்படையில் தான் ஒருவரை நண்பன் என்று தீர்மானிப்போம்
அதே நேரம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை பரம விரோதியாக பார்ப்பதற்க்கு நியாயமான காரணங்களும் இருக்கலாம் நியாயமே இல்லாத காரணங்களும் இருக்கலாம்
வியாபார ரீதியாகவோ அல்லது அவர் தனக்கு பிடிக்காத விதத்தில் நடந்து கொண்டிருப்பதாலோ அல்லது தனக்கு பிடித்தவர்களுக்கு எதிராக செயல் படுகிறார் என்பதற்காகவோ ஒருவரை எதிரியாக பார்க்கப்படலாம்
அல்லது தன்னை சார்ந்தவரை நேசிக்கவில்லை அல்லது தன்னை சார்ந்த நபர்களுக்கு கீழ்படியவில்லை என்பதற்காகவும் கூட ஒருவரை எதிரியாக கணிக்கலாம்
இதில் எதுவாக இருந்தாலும் மார்க்க ரீதியில் விவகாரங்களை பேசி தீர்ப்பதும் அதற்க்கு கட்டுப்படுவதும் தான் முஸ்லிமின் மரபாகும்
அதிகார பலத்தால் பண பலத்தால் எதிரிகளை அடக்கி விடலாம் என்று கருதுவது இறைவிசுவாசிகளின் பண்பாக இருக்க முடியாது
அவ்வாறு அடக்கி ஆள்வோருக்கு அவர்களின் இறுதி முடிவு மோசமாக இருக்கும் என்பதும் மரணத்திற்க்கு பின் வெற்றி வாய்ப்பை இழப்பார் என்பதுமே இஸ்லாமிய வரலாறுகள் பறைசாற்றுகின்றது
பகைமை விரோதம் போன்ற காரணத்தால் இஸ்லாத்திற்க்கு வருவதற்க்கு முன்னால் நரகத்தின் படுகுழிக்கு செல்வதற்க்கு தயாராக இருந்த அநேக சஹாபாக்களை சகோதரத்துவத்தில் ஒன்றிணைத்தது அவர்கள் குர்ஆன் ஹதீசுக்கு கட்டுப்பட்ட தன்மையே ஆகும்
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்
அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்
நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து
அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள் இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள் அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்
நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்
(அல்குர்ஆன் : 3:103)
وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْبِطُوْنَهٗ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்
அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள்
அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்
அல்குர்ஆன் 4-83
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment