மறுமையில் பதக்கம் வேண்டுமா

    மறுமையில் நல்லறங்களே நம்

          !!  வெற்றியின் அவார்ட் !!

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

                     11-02-2017
             கட்டுரை  எண்  1068
              -----------------------------
           J. யாஸீன் இம்தாதி
                   !+++++++++!

    Bismillahir Rahmanir Raheem
           !! -------------------------------!!

உலக வாழ்வில் திறமை இருப்பவர் வெற்றி பெறுவார் என்பதை போலே  திறமை இல்லாதவரும் குறுக்கு வழியில் வெற்றி வாய்ப்பை பெற முடியும்

1-பிறரின் பரிந்துறை மூலம்

2-தனது அதிகாரத்தின் மூலம்

3-தனது செல்வத்தின் மூலம்

4-தனது தந்திரத்தின் மூலம்

இதற்க்கெல்லாம் மூல காரணம் இவைகளை எல்லாம் மிஞ்சுகிற வலிமையை பெற்றுள்ள ஒரு அதிகாரம் படைத்தவன் உலகில் இல்லை என்பதாலும் அல்லது இவைகளுக்கு பிற மனிதர்களின் உள்ளங்களும் அடிமைபட்டு இருப்பதாலும் தான்

அதே நேரம் மறுமை நாளிலோ இவைகளில் எந்த ஒன்றும் படைத்த இறைவனிடம் செல்லாது என்பது தான் உண்மை

மனிதர்கள் உலக வாழ்வில் ஈட்டிய பொருளும் மறுமையில் சுவனத்தை பெறுவதற்க்கு செல்லாது மறுமையில் பிறர்கள் மூலம் பெறப்படும் பரிந்துறைகளும் இறைவனிடம் எடுபடாது

மறுமையில் வெற்றி பெறுவதாக இருந்தால் உலக வாழ்வில் நாம் சேமித்த நல்லறங்களின் நன்மைகளின் மூலமாக மாத்திரமே வெற்றியை பெற முடியும்

அந்த நாளில் இறைவனின் சந்நதியில் திருந்தி வாழ்வதற்க்கு எவருக்குமே மறு வாய்ப்புகள் அளிக்கப்படாது

காரணம் மறுமை என்பது ஒரு மனிதனுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்று தீர்வு பெறும் தீர்ப்பு நாளே தவிர மறு ஜன்மம் என்ற பேச்சுக்கே இஸ்லாத்தில் இடம் இல்லை

எனவே குறைந்த பட்ச உலக வாழ் நாளில் நல்லறங்கள் செய்ய வேண்டிய நேரத்தை வீணடித்து விடாதீர்கள்

களத்தில் இறங்கி பணியாற்றுவதும் நிஜத்தில் நமது வாழ்நாளில் நடைமுறை படுத்துவதும் தான் நல்லறமே தவிர

இது போன்ற எழுத்துக்களோ அல்லது வீரமாக பயான் செய்வதோ அல்லது அதை விடிய விடிய  செவியுறுவதோ பெரிய நல்லறம் என்று நினைத்து நல்லறத்தின் விரிவான பொருளை சுருக்கி மறுமை நாளில் ஏமாந்து விட வேண்டாம்

وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்

அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஓப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது

இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்

          (அல்குர்ஆன் : 2:123)

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ‏ 

யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்

             (அல்குர்ஆன் : 7:9)

فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ وَّلَا مِنَ الَّذِيْنَ كَفَرُوْا‌ مَاْوٰٮكُمُ النَّارُ‌ هِىَ مَوْلٰٮكُمْ‌ وَبِئْسَ الْمَصِيْرُ‏ 

“ஆகவே, இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது

உங்களுடைய தங்குமிடம் நரகம் தான்; அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்” (என்றுங் கூறப்படும்)

              அல்குர்ஆன்  57-15

            நட்புடன்   J இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்