தாயே தன்நிகரானவள்

             !! அன்னையர் தினம் !!

          இஸ்லாமிய பார்வையில்

  √|||===========|||============|||√
     14-05 -2017 கட்டுரை எண் 1086
                -----------------------------
              J. யாஸீன் இம்தாதி
                       !+++++++++!
         Bismillahir Rahmanir Raheem
             !! -------------------------------!!

MAY 5 உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடும் நாளாக மாறி உள்ளது

தாயிற் சிறந்த கோயில் இல்லை என்று தத்துவம் பேசும் நம் நாட்டில் தான் தாய்மார்களை அடித்து விரட்டும் மோசமான சூழலும் முதியோர் இல்லங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது

வருடத்திற்க்கு ஒரு முறை மாத்திரம் அன்னையர் தினம் என்று கொண்டாடுவதால் ஈன்றெடுத்த அன்னையர்களின் மனம் குளிரப்போவதும் இல்லை அவர்களின் பிள்ளைகளின் முக்கியமான கடமைகள் நீங்கப்போவதும் இல்லை


மனைவியின் திருப்தியை பெற பெற்ற தாயை முதியோர் இல்லம் அனுப்புவதும் குற்றம் தான்

தாயின் திருப்தியை பெற தன்னையே நம்பி வந்த மனைவியை அடிமையாக நடத்துவதும் குற்றம் தான்

அன்னையர் என்பதற்காக சுய மரியாதை இழந்து அவர்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வது என்பது அன்னையரை மதிக்கும் முறை இல்லை வணக்கத்திற்க்கு உரியவன் கடவுள் என்பவனை தவிர வேறு எவரும் இல்லை

ஒருவரை மதிக்கிறோம் எனும் பெயரில் வரம்பு மீறி புகழ்வதும் சாஸ்டாங்கம் செய்வதும் பகுத்தறிவுக்கு எதிரானது

கடவுள் வேறு மனிதன் வேறு என்ற பாகுபாட்டை எப்போதும் மீற கூடாது

அன்னையரை மதிப்பது என்றால் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை சேவைகளை பணிவிடைகளை தவறாது ஆற்ற வேண்டும் என்பது மட்டும் தான் அன்னையர் தினத்தின் சாரம்

இந்த சாரத்தை மிகவும் அழுத்தமாக மனித சமூகத்திற்க்கு போதனை செய்துள்ள மார்க்கம் இஸ்லாம் ஆகும் இறைவனுக்காக கோடிகளை செலவு செய்து தன்னை ஈன்றெடுத்த அன்னையரை கையேந்த வைத்தால் அந்த கோடிகளுக்கும் இறைவனிடத்தில் புண்ணியம் இல்லை

ஈன்றெடுத்த அன்னை இறைவனுக்கு வைத்தாலும் அன்னையர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் குறை வைத்தால் அதை கூட கடுமையான குற்றம் என்று கண்டித்து அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை பாடம் நடத்தி அழகான கட்டளைகளை பிரகடனபடுத்தி உள்ள மார்க்கமே இஸ்லாம்

சுருக்கமாக சொன்னால் பிறப்புக்கு மூல காரணமாக இருக்கும் தந்தையை விட மூன்று மடங்கு ஒரு மனிதனை ஈன்றெடுத்த தாய் தான் சிறந்தவர் என்பதை அழுத்தமாக சொல்லும் மார்க்கமே இஸ்லாம்

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِ مَنْ اَحَقُّ بِحُسْنِ صَحَابَتِيْ؟ قَالَ: اُمُّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: ثُمَّ اُمُّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: ثُمَّ اُمُّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: ثُمَّ اَبُوْك

َ

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

ஒருவர் நபி (ஸல்) அவர்களின் சமுகம் வந்து, நான் அழகிய முறையில் நடந்துகொள்ள அதிக தகுதியுடைவர் யார்?'' என வினவியதற்கு, உமது தாய்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் பிறகு யார்?'' என அவர் கேட்க உமது தாய்'' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் பிறகு யார்?'' என அவர் கேட்க, உமது தாய்'' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

பிறகு யார்?'' எனக் கேட்க, உமது தந்தை!'' என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

                 நூல் புகாரி

           நட்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்