தர்பூசிணி பழம்
!!! தர்பூசிணி தரும் பாடம் !!!
||=============================||
08-04 -2017 கட்டுரை எண் 1077
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
மழை பொய்த்து போனதாலும் பூமியில் தண்ணீர் காய்ந்து போனதாலும் வறட்சி நிலவுகிறது என்பதே வானிலை அறிக்கை அறிவியல் தரும் விளக்கம்
ஆனால் பூமி வறண்டு போய் இருக்கும் இதே மாதத்தில் தான் தண்ணீர் மட்டுமே நிறைந்துள்ள தர்பூசிணி எனும் அற்புதமான ருசி மிகுந்த காய்கள் கோடி கணக்கில் உற்பத்தியாகிறது
இருக்கின்ற ஒரு பொருளின் மூலமாகத்தான் மறு பொருள் உருவாக முடியும் என்பது தான் இயற்கை அது தான் அறிவியல் உண்மை
ஆனால் நீரே இல்லாது வறட்சியால் பல ஏரிகளும் குளங்களும் ஆறுகளும் கருவாடு போல் காட்சியளிக்கும் சூழலில் தர்பூசிணி எனும் காய்கனிகள் கோடி கணக்கில் மண்ணில் நீரை உறிஞ்சி வளர்கிறது என்பது அறிவியலுக்கு எதிரானது அறிவுக்கும் முரணானது ஆனாலும் இது தான் உண்மை
மனிதன் மமதை கொள்ளும் அறிவியலையும் தாண்டி இறைவனின் ஆற்றல் உள்ளது என்பதை நிரூபிக்கும் பல உண்மைகளில் தர்பூசிணி எனும் காய்கனிகளும் ஒன்று
பலம் வாய்ந்த பிளாஸ்டிக் குடங்களில் சில்வர் பாத்திரங்களில் தண்ணீரை மனிதன் பாதுகாப்பதை விட அற்புதமான கடின தோல்களினாலும் அதே நேரம் மனிதன் நினைத்தால் சுலபமாக வெட்டி உண்ணும் வடிவத்திலும் தர்பூசிணி பழங்கள் இருப்பது இறைவன் மனித சமுதாயத்திற்க்கு செய்துள்ள ஈடில்லா பேரருளாகும்
அறிவியலையே கடவுளாக நினைப்பவன் அந்த அறிவியலையே உருவாக்கும் மனிதனின் பகுத்தறிவை அற்புதமாக படைத்த இறைவனின் வல்லமையை மட்டும் சிந்திக்க மறுக்கின்றான்
இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட தயங்குகின்றான் கடவுளை கற்பித்தவன் முட்டாள் அதை வணங்குபவன் காட்டுமிராண்டி அதை பரப்புபவன் அயோக்கியன் என்று சொல்லி கடவுளை மறுக்கும் பகுத்தறிவாளர்களே இதற்க்கு அறிவு ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் தெளிவாக பதில் சொல்லும் காலம் வரை முட்டாள்கள் என்பதே உண்மை
ஆன்மீகத்தின் பெயரால் நடை பெறும் அயோக்கியதனங்களை பித்தலாட்டங்களை கண்டிக்கிறோம் எனும் பெயரில் உண்மையான ஆன்மீகத்தையே குறை காணுவது மடமைத்தனமாகும்
பிள்ளைகள் மோசமானவர்கள் என்பதற்காக பிள்ளைகளை பெற்றெடுத்த நல்ல தகப்பனும் இல்லை என்று வாதிப்பவன் அறிவாளி அல்ல அவனே குறுகிய பார்வை உள்ளவன்
ஒரு தர்பூசிணி தரும் சிந்தனை பாடத்தை கூட நாத்தீகர்களால் தர முடியவில்லை என்பது தான் கடவுள் நாத்தீகர்களுக்கு தந்துள்ள அவமானம்
படைப்பினங்களை மதிப்போம் படைப்பாளை மட்டுமே துதிப்போம்
اَمَّنخَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً فَاَنْبَتْنَا بِهٖ حَدَآٮِٕقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَـكُمْ اَنْ تُـنْبِتُوْا شَجَرَهَا ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ بَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ
அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்?
பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம் அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை
ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்
(அல்குர்ஆன் : 27:60)
ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
(அல்குர்ஆன் : 56:64)
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment