அழைப்பு பணி
சத்தியத்தை சொல்வதே கடமை
!! திணிப்பதோ மடமை !!
|=============================||
19-02-2017
கட்டுரை எண் 1071
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபட்டவை
ஒரு விசயத்தில் அனைவருமே ஒரே முடிவை எடுப்பார்கள் அல்லது புரிந்து கொள்வார்கள் என்று சொல்ல முடியாது
ஒருவருக்கு ஒரு முறை சொல்லி புரிய வைக்கும் ஒரு விசயத்தை வேறு பலர்களுக்கு பல முறை சொன்னாலும் புரிய வைக்க முடியாது என்ற நிலையிலும் மனிதர்கள் பலவீனமாக படைக்கப்பட்டுள்ளார்கள் என்று முதலில் நாம் அறிய கடமைபட்டு உள்ளோம்
இறைனால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களால் கூட தெளிவாக நளினமாக அக்கரை உணர்வோடு பிரச்சாரம் செய்தும் அவர்களாலும் அனைத்து மனிதர்களையும் ஒரே கொள்கையில் கொண்டு வர முடியவில்லை என்பதே இதற்க்கு தகுந்த சான்றாகும்
பாசமுள்ள மனைவியாக பிள்ளையாக இருந்தாலும் பல நேரங்களில் நமது விருப்பத்திற்க்கு மாற்றமாக நடப்பதும் கோபிப்பதும் வரம்பு மீறுவதும் இதனால் தான்
இத்தகைய சூழலில் நல்ல கருத்தை மக்களுக்கு சொல்லும் நபர்கள் இந்த வேறுபாட்டை முதலில் நன்கு புரிய வேண்டும்
தான் சொல்லும் கருத்தை ஒருவர் கேட்கவில்லை அல்லது ஏற்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது கோபம் கொள்வதோ அல்லது வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதோ முஸ்லிமான நமக்கு உகந்த காரியம் அல்ல
நல்ல விசயங்களை பிறர்களுக்கு எத்தி வைப்பது தான் கடமையே தவிர அவர்களை நல்வழியில் கொண்டு வருவது நமது கடமையும் அல்ல மார்க்கம் சொல்லும் நெறிமுறையும் அல்ல
ஏகத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களால் கூட அவர்களின் தந்தை ஆஜர் என்பவரை நேர்வழியில் கொண்டு வர முடியவில்லை
லூத் மற்றும் நூஹ் (அலை) அவர்களால் கூட தனது மனைவியை பிள்ளைகளை நேர்வழியில் கொண்டு வர இயலவில்லை
திருக்குர்ஆனில் ஒட்டு மொத்த மனித இனத்திற்க்கு முன்னுதாரணமாக இறைவனால் அடையாளம் காட்டப்பட்ட பெருந்தகை ஆசியா எனும் பெண்ணால் கூட தனது கணவன் பிர்அவ்னை நேர்வழியில் கொண்டு வர முடியவில்லை
எனவே சத்தியம் என்று எதை நாம் விளங்கி வைத்துள்ளோமோ அதை நளினமாக மென்மையாக எடுத்து சொல்லுவோம்
அதை ஏற்பதும் புறக்கணிப்பதும் அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விசயம்
அவர்கள் ஏற்றாலும் புறக்கணித்து நடந்தாலும் அதனால் நமக்கு மறுமை நன்மைகளில் எந்த ஒன்றும் குறைய போவதில்லை
நமது யோசனைகளுக்கு விருப்பங்களுக்கு பிறர்களை நிர்பந்தமாக கொண்டு வர ஆசிப்பது தேவையற்ற சிந்தனையாகும்
اِنْ تَحْرِصْ عَلٰى هُدٰٮهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ يُّضِلُّ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ
(நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை
(அல்குர்ஆன் : 16:37)
اِنَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது
ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்
(அல்குர்ஆன் : 28:56)
لَيْسَ عَلَيْكَ هُدٰٮهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்
அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்
(அல்குர்ஆன் : 2:272)
நட்புடன் இம்தாதி
Comments
Post a Comment