இளைய சமூகத்தின் வழிகேடு மொபைல்
கள்ளக்காதலியும்
கள்ளக்காதலனும்
மொபைல் பேச்சுக்கள்
*******************************
17-01-17-- J. யாஸீன் இம்தாதி
-----------------------------------
" கட்டுரை எண் 1064
Bismillahir Rahmanir Raheem
====================
ஒருவரின் குணநலன்களை புரிந்து அவருடைய நடவடிக்கைகளை சரியாக எடை போடுவது ஒரு வகை
ஒருவரின் செய்கையை அறிந்து அவருடைய நடவடிக்கைகளை தவறா சரியா என்று புரிவதும் ஒரு வகை
தற்காலத்தில் தெருவில் நடக்கும் போதும் சுற்றுலா தளங்களிலும் அநேகமானோர் மொபைலில் சிரித்தும் ரசித்தும் நீண்ட நேரம் பேசுகின்ற காட்சியை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகின்றது
இவர்கள் அருகில் இருப்பவர் யார் என்பதை கூட கவனிக்காது மணிக்கணக்கில் பலர் மொபைலில் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது
இவர்கள் யார் ? யாரோடு மணிக் கணக்கில் பேசிக் கொண்டுள்ளனர் ?
என்ற ஒரு சந்தேகம் பார்வையாளர்கள் மத்தியில் மனதளவில் எழுவதை மறுக்க முடியாது
அதே நேரம் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசும் இவர்கள் யாரிடம் பேசி கொண்டுள்ளனர் என்பதை எதை பற்றி பேசி கொண்டுள்ளனர் என்பதை அனுமானிக்க முடியும்
உள்ளூரில் இருக்கும் கணவனோ மனைவியோ மணிக்கணக்கில் தொலைபேசியில் உரையாட மாட்டார்கள் அவ்வாறு பேசுவதை விரும்புவதும் இல்லை அதிக பட்சமாக கணவன் மனைவியின் தொலைபேசி உரையாடல் ஐந்து நிமிடத்தை கூட தாண்டாது என்பது தான் ஊர் அறிந்த உண்மை
அதே நேரம் வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் தன்னுடைய மனைவி தெருவில் இருக்கும் போதோ அல்லது பொது இடங்களில் இருக்கும் போதோ நீண்ட நேரம் பேசுவதில்லை
எங்கு பேச வேண்டும் எந்த நேரம் பேச வேண்டும் என்ற நேர வரை முறை குறிப்பேடை அவர்கள் வரையறுத்து தான் வைத்திருப்பார்கள்
இனம் சார்ந்த நண்பனோடு அல்லது நண்பியோடு பேசினாலும் அவர்களின் உரையாடல் நீண்ட நேரம் தொலைபேசியில் நீடிக்காது
அதிகபட்சமாக குடும்ப சண்டைகளை வெளியில் காட்டி கொள்வோரும் வியாபாரம் நிமித்தமாக பேசும் பேச்சுக்கள் மட்டுமே சற்று நேரம் தொலை பேசியில் நீடிக்கும் இந்த பேச்சுக்களை அவர்களின் முகபாவனைகளில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது
அப்படியானால் நீண்ட நேரம் தனிமையிலும் பொது இடங்களிலும் நடந்து கொண்டும் பார்வைகளை சுழட்டி கொண்டும் பேசும் நபர்கள் யாரோடு பேசுகிறார்கள் என்ற கேள்விக்கு ஒரே பதில்
காதல் காமம் கள்ளக்காதல் எனும் பெயரால் பேசும் நபர்கள் மட்டுமே இந்த அணுகுமுறையை கடை பிடிக்கின்றனர்
காரணம் அவர்களின் உரையாடல் அவர்களை அறிந்த நபர்களுக்கு முன்பாகவோ அல்லது அவர்களை அறிந்த தெருவிலோ நின்று கொண்டு பேச மாட்டார்கள் இவர்களின் பேச்சில் அதிகம் காமமும் கள்ளத்தனங்களும் ஏமாற்று வார்த்தைகளும் நம்பிக்கை துரோகமும் நிச்சயம் இடம் பெறும்
இதில் வேதனை என்னவெனில் ஏமாற்றப்பட்டு கொண்டுள்ளோம் என்பதை கூட அறியாமல் வாட்சப் மற்றும் முகநூல் இன்பாக்சில் எழுத்து வடிவில் ஆண்களை பெண்ணாக நினைத்து பேசும் இனகவர்ச்சி ஆண்களும் பெண்களை ஆணாக நினைத்து பேசும் ஏமாறும் பெண்களும் தற்காலத்தில் மிகவும் பெறுகி விட்டனர்
இவர்கள் தான் கற்பனைகளை நிஜங்களாகவும் நிஜங்களை கற்பனைகளாகவும் சிந்தித்து வாழ்வில் தோல்விகளை அவமானங்களை பொருள் இழப்புகளை ஏன் சில நேரம் மான இழப்புகளை உயிர் இழப்புகளை கூட அதிகம் சந்தித்து வருகின்றனர்
ஒரு வகையில் இவர்கள் உளவியல் சார்ந்த நோயாளிகளே
இது போல் ஏமாந்தவர்களில் சிலர்களை நாம் அனுபவத்தில் கூட பார்த்துள்ளோம்
அதிலும் குறிப்பாக கல்லூரிகளில் பள்ளிகளில் படிக்கும் இளைய தலைமுறைகளிடம் இது அதிகமாகவே காணப்படுகின்றது
பொறுத்தமற்ற வயதில் தேவையற்ற காரணங்களுக்காக மொபைலை பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் அவர்களை அறியாமலேயே தன் பிள்ளைகளை விபச்சார விடுதிகளுக்கு அனுப்பி வைக்கும் முட்டாள்தனத்தையே மேற் கொள்கின்றனர்
வழிகேடுகளை தேடி சென்று சீரழிந்த காலம் மடிந்து தற்போது இருக்கும் இடத்திலேயே வழிகேடுகளை அலை போல் பெறப்படும் காலத்தில் நாம் வாழ்கின்றோம்
எந்த ஒரு தவறையும் செய்யும் முன்பே ஒருவரை காப்பாற்றுவதே முன்னெச்சரிக்கை
தவறுகளில் வீழ்ந்த பின்பு அந்த தவறுகளில் இருந்து மீட்டு எடுப்பது என்பது முள்ளில் சிக்கிய சேலையை பிடுங்கி எடுப்பதற்க்கு சமமான ஒரு செயலாகும்
குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்வோரின் பிள்ளைகள் இந்த விபத்தில் அதிகமாக சிக்கி தவிக்கின்றனர்
வாழ்க்கை துவங்கும் போது மனதளவில் வாழா வெட்டியாக தன் பிள்ளைகள் இருக்க கூடாது என்று கருதும் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்த தவறாதீர்கள்
பாலியல் பாடங்களை ஒழுங்கீனமான நடைமுறைகளை பருவம் அடையும் முன்பே பார்த்து சலித்து போன பிள்ளைகள் இன்று பெருகி விட்டனர்
உங்கள் கண்களுக்கு மட்டுமே அவர்கள் உங்கள் பிள்ளைகள் மற்றவர்கள் கண்களுக்கோ அவர்கள் ஆண் பெண் என்ற இரு பார்வையை தவிர வேறு எந்த பார்வையிலும் பார்க்கப்பட மாட்டார்கள்
இறையச்ச பாடமும் தேவை வழிகேடுகளின் சூழலை முற்றிலும் தவிர்த்திருக்கும் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் தேவை
இறையச்சம் இருப்பதால் யாருடைய ஆண்மையும் பெண்மையும் அழிந்து விட போவது இல்லை
عَنْ اَيُّوْبَ بْنِ مُوْسَيؒ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ 1 اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ اَفْضَلَ مِنَ اَدَبٍ حَسَنٍ
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விடச் சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது
என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தன் பாட்டனார் வாயிலாகத் தம் தந்தை கூறியதாக ஹஜ்ரத் அய்யூப் (ரஹ்) அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
عَنِ الْحَسَنِؒ يَقُوْلُ: بَلَغَنَا اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: رَحِمَ اللهُ عَبْدًا تَكَلَّمَ فَغَنِمَ اَوْ سَكَتَ فَسَلِمَ
நல்ல பேச்சுக்களைப் பேசி இம்மை, மறுமையில் அதன் பலனை அடைகின்ற, அல்லது மௌனமாக இருந்து, நாவின் கெடுதிகளைவிட்டு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் அடியான் மீது அல்லாஹுதஆலா அருள் புரிவானாக!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எங்களுக்குக் கிடைத்துள்ளது' என ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் பைஹகீ
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment