தனிமையே தவறுகளின் தாயகம்
!! தனிமை ஒரு அபாயம் !!
===============================
ஒரு மனிதன் தவறுகளை துணிந்து செய்வதற்க்கும் அதை முறையின்றி சிந்திப்பதற்க்கும் தவறான பல முடிவுகளை விரைவாக எடுப்பதற்க்கும் மூல காரணமாக அமைந்திருப்பது மன உளைச்சல் நேரங்களில் தனிமை எனும் நிலையை தேர்வு செய்வது தான்
தனிமை எனும் சூழலை அதிகமாக தவிர்த்து வாழ்ந்தாலே அநேகமான தவறுகளிலிருந்து மனிதன் தப்பிக்க இயலும்
வாழ்வதற்க்கு வழி கேட்டு சமுதாயத்தை அணுகும் மனிதன் அந்த நிலையை அடையாத போது அவன் தற்கொலை செய்து சாவதற்க்கு தனிமை தான் அந்த சிந்தனையை அவனுக்கு தூண்டுகின்றது
சமுதாயத்தோடு ஒட்டி வாழும் போது தான் சமூகம் செய்யும் தவறுகளை பார்த்து அதில் இருந்து நாம் எவ்வாறு விலகுவது அதற்கான பயிற்சியை பெறுவது என்ற புரிந்துணர்வை பெற முடியும்
யாருமே இல்லாத காட்டில் தனிமையில் சென்று அங்கிருக்கும் இயற்கை உணவுகளை உண்டு விட்டு நான் எந்த தவறுகளையும் செய்தது இல்லை யாரையும் ஏமாற்றியது இல்லை என்று பெறுமை பேசுவதுஒரு மனிதனின் சிறப்பு அல்ல
காரணம் தவறுகளை பார்க்கும் சூழலோ அந்த தவறுகளை கண்டிக்கும் நிர்பந்தமோ தனிமை நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்படாது
கழிவறை செல்வதற்க்கும் நிம்மதியாக ஓய்வெடுப்பதற்க்கும் முன்னேற்றமான சிந்தனைகளுக்கும் தான் தனிமை எனும் நிலை மனிதனுக்கு மிகவும் அவசியம்
இது அல்லாத எந்த தனிமையும் ஆபத்தானதே
சிந்தனை J .இம்தாதி
Comments
Post a Comment