படித்தோர் பங்கு
நீங்கள் படித்தோரா சமூகத்தில்
!! உங்கள் பங்கு என்ன !!
♦____♦____♦_____♦
14--01-2017
J.யாஸீன் இம்தாதி
=========
Bismillahir Rahmanir Raheem
--------------------
படித்தோர்கள் தான் எதிலும் முன்னனியில் நிற்க வேண்டும் அப்போது தான் ஒரு காரியம் சீராக நடைபெறும் அறிவுப்பூர்வமாகவும் நடை பெறும்
விபரமில்லாதவர்கள் கூட படித்தோரின் செயல்பாடுகளை பார்த்து தங்களை சீர்திருத்தி கொள்ளவும் அவர்களை பார்த்து பணியாற்றுவதிலும் முனைப்பு காட்டுவார்கள்
இது தான் மரபாகும் !
ஆனால் நடப்பது என்ன?
படித்தவர்களின் அதிகமானோர் அந்த படிப்பை வைத்து தங்களது வாழ்கை முன்னேற்றத்தை மட்டும் எப்போதும் சிந்திக்கின்றார்களே தவிர
அதன் மூலம் பிறர்களையும் நல்வழி படுத்த வேண்டும் என்பதில் அக்கரை காட்டுவது மிகவும் குறைவு
நம் சமூகத்தில் படித்தோரின் பங்கு கருத்து சொல்வதிலும் விவாதிப்பதில் மட்டும் தான் முன்னனியில் காணப்படுகின்றது
அரசியல் ஆன்மீகம் எந்த ஒன்றிலும் சரியே
ஆனால் தியாகம் செய்வதிலே களப்பணி ஆற்றுவதிலே படித்தோரின் நேரடி பங்கு மிகவும் குறைவானதாகவே காலம் காலமாக பார்த்து வருகிறோம்
ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுப்போரில் அதற்காக குரல் கொடுப்போரில் போராடுபவர்களில் படித்தவர்களை பார்க்கலாம்
ஆனால் காளையை அடக்குவதில் ஒரு டாக்டரோ அல்லது மேனேஜரோ அல்லது ஒரு இன்ஜினியரோ நேரடி பங்கு கொள்ள மாட்டார்
அதே நேரம் இது வீரவிளையாட்டு என்றும் தமிழர்களின் கலாச்சாரம் என்றும் வீர வசனம் பேசுவார்கள்
உடல் பயிற்சி எனும் பெயரில் தனது உடலை ஆடு மாடுகளை போல் சதையாக வளர்த்துவதில் அக்கரை காட்டும் எவரும் சமூகத்தில் கலவரம் எற்படும் நேரம் சமூக மக்களை பாதுகாக்க தனது வீரியமான உடற்கட்டை பயன்படுத்தியது இல்லை
இதே போல் தான் படித்தோரின் பங்கும் நம் சமூகத்தில் உள்ளது
விதிவிலக்காக சிலர்களை தவிர
எனவே கருத்து சொல்வதில் முனைப்பு காட்டும் படித்தோர்கள் அதை முன் நின்று நடத்துவதிலே அதற்காக தியாகம் செய்வதிலே அல்லது அதற்க்கு தலைமை எற்பதிலே முன்னனியில் இடம் பெறுங்கள்
நட்புடன் J இம்தாதி
Comments
Post a Comment