இயற்கை வளமும் செயற்கை வளமும்

இயற்கை வளங்களும் செயற்கை
                !! வளங்களும் !!

பீட்டா நிறுவனத்தை எதிர்ப்பது ஏன் ?

      *******************************

      25-01-17-- J. யாஸீன் இம்தாதி
             -----------------------------------
             கட்டுரை எண் 1065

       Bismillahir Rahmanir Raheem

           ====================
இயற்கை வளங்கள் செயற்கை வளங்கள் இவை இரண்டையும் பயன் படுத்தி கொண்டு தான் ஒட்டு மனித சமுதாயமும் உலகில் வாழ்ந்து கொண்டுள்ளனர்

இதில் ஒரு வளத்தை மட்டும் பயன் படுத்திக் கொண்டு மற்ற ஒன்றை முற்றிலும் ஒழித்து மனித சமுதாயத்தால் வாழ இயலாது
காரணம் செயற்கை என்று நாம் எதை சொன்னாலும் அவைகளுக்கும் மூலக்கூறு இயற்கை வளங்களும் அதன் வழி காட்டல்கள் தான் காரணமாக அமைந்துள்ளது

இயற்கை வளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் முளைப்பது இல்லை பூமியின் சில இடங்கள் வேளாண்மை சார்ந்த பூமியாக இருக்கும் பூமியின் சில இடங்கள் வேளாண்மையை பதனிடும் இடமாக மட்டுமே அமைந்திருக்கும்

இவ்வாறு தான் இறைவன் உலக இயக்கத்தை தீர்மானித்துள்ளான்
இதில் இயற்கை வளங்களை முறையின்றி அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது சில விளைவுகளை சந்திப்பதை போல் செயற்கை வளங்களை முறை தாண்டி பயன்படுத்தும் போது பல விளைவுகளையும் இழப்புகளையும் மனித சமுதாயம் சந்திக்கவே செய்யும் இதுவே எதார்த்தமாகும்

இதில் ஒரு வளத்தை ஆதரிப்போர் மறு வளத்தை குற்றம்சாட்டி
குறை கூறி கொண்டிருப்பதில் பயன் இல்லை

அதே நேரம் இயற்கை வளங்களை உருவாக்கும் மூல தனத்தின் செலவுகள் அதிகம் ஆனால் அதன் மூலம் கிடைக்கும் இலாபம் மிகவும் குறைவாகவே இருக்கும்
செயற்கை வளங்களை உருவாக்கும் மூல தனம் குறைவாக இருக்கும் ஆனால் அதன் மூலம் பெறும் இலாபம் அதிகமாக இருக்கும்



இப்போது குறுகிய வழியில் கூடுதலான பொருளியலை திரட்ட வேண்டும் என்ற செயற்கை வளங்களை பெற்ற எண்ணம் உடையோர் தங்கள் பொருளை சந்தையில் கூடுதலாக விற்ப்பதற்க்கு தவறான போலியான பல வழிகளை கையாள்கின்றனர்

1- தனது உற்பத்தியை தரம் மிகுந்ததாக உபயோகம் நிறைந்ததாக காட்டி வணிகம் செய்வது

2- அதன் இலாபங்களை அந்த தொழிலுக்கு சம்மந்தமே இல்லாத நடிகர் நடிகைகள் இதர பிரபல்யமானவர்களை கொண்டு அதிகபட்சமாக விளம்பரம் செய்து அப்பாவிகளை ஏமாற்றுவது

3- தரமான பிறர் பொருள்களை தரம் குறைந்ததாக காட்டுவதற்காக மக்களிடம் துஷ்பிரச்சாரம் செய்வது
அவ்வகையில் செயல்படும் ஒரு அமைப்பே அமெரிக்காவில் இருந்து செயல்படும் பீட்டா( Peta )எனும் நிறுவனம்

மிருகவதையை தடை செய்ய போராட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் துவங்கி அதில் பெயர் எடுத்த சில வருடங்களிலேயே தங்களது வளர்ச்சியை மூல தனமாக்கி செயற்கை வளங்களுக்கு விளம்பரம் செய்யும் வியாபாரிகளாகவே மாறி விட்டனர்

இந்த நிறுவனத்தின் சார்பாக செய்யப்படும் விளம்பரங்களில் செயற்கை பொருள்களே மிகவும் அதிகமாக முன்னனி வகிக்கின்றது

அறிவியல் துணை கொண்டு பனை தென்னை போன்றவற்றின் இயற்கை சாருகளை உருவாக்க முடியும் என்ற சூழலிலும் கூட மனிதனின் நாவுக்கு ருசியை தவிர வேறு எவ்வகையிலும் பயன் அளிக்காத குளிர்பானங்களை மெருகூட்டி வியாபாரம் செய்வதும் இந்த நிறுவனத்தின் கை கூலிகளே

மாட்டு சானத்தில் கிடைக்கும் இயற்கை உரத்தை விட செயற்கை முறையில் தயாரிக்கப்படும் உரங்களையே தரம் வாய்ந்ததாக சித்தரிப்பது இவர்களின் லாப நோக்கம் கொண்ட செயல்பாடாகும்

தற்போது ஜல்லிக்கட்டு தடை நீங்கினாலும் மீண்டும் மீண்டும் பீட்டாவை அங்கீகரிப்போர் அதற்க்கு ஆதரவு குரல் கொடுத்து கொண்டிருப்பது இவர்கள் மூலம் பெறும் இலாத்திற்க்கும் விளம்பரத்திற்க்கு தானே தவிர சமூகம் சார்ந்த அக்கரை உணர்வோடு இல்லை

இஸ்லாத்தை பொறுத்தவரை மனிதனின் உடலுக்கும் ஆரோக்யத்திற்க்கும் ஏற்ற பொருள் எதுவானாலும் ஹலால் தான்
அதில் இந்த பொருளை வாங்காதீர் அந்த பொருளை வாங்காதீர் என்ற பார்வையும் இந்த நாட்டு தயாரிப்பை வாங்காதீர் அந்த நாட்டு தயாரிப்பை வாங்காதீர் என்பது இஸ்லாத்தில் இல்லை

ﻳٰٓﺎَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﻛُﻠُﻮْﺍ ﻣِﻤَّﺎ ﻓِﻰ ﺍﻟْﺎَﺭْﺽِ ﺣَﻠٰﻠًﺎ ﻃَﻴِّﺒًﺎ ﻭَّﻟَﺎ ﺗَﺘَّﺒِﻌُﻮْﺍ ﺧُﻄُﻮٰﺕِ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦِ ﺍِﻧَّﻪٗ ﻟَـﻜُﻢْ ﻋَﺪُﻭٌّ ﻣُّﺒِﻴْﻦٌ 

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்

             (அல்குர்ஆன் : 2:168) 

ﻭَ ﻣِﻦَ ﺍﻟْﺎَﻧْﻌَﺎﻡِ ﺣَﻤُﻮْﻟَﺔً ﻭَّﻓَﺮْﺷًﺎ ﻛُﻠُﻮْﺍ ﻣِﻤَّﺎ ﺭَﺯَﻗَﻜُﻢُ ﺍﻟﻠّٰﻪُ ﻭَ ﻟَﺎ ﺗَﺘَّﺒِﻌُﻮْﺍ ﺧُﻄُﻮٰﺕِ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦِ ﺍِﻧَّﻪٗ ﻟَـﻜُﻢْ ﻋَﺪُﻭٌّ ﻣُّﺒِﻴْﻦٌ ۙ

இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்

           (அல்குர்ஆன் : 6:142)  

ﻳٰۤـﺎَﻳُّﻬَﺎ ﺍﻟﺮُّﺳُﻞُ ﻛُﻠُﻮْﺍ ﻣِﻦَ ﺍﻟﻄَّﻴِّﺒٰﺖِ ﻭَﺍﻋْﻤَﻠُﻮْﺍ ﺻَﺎﻟِﺤًـﺎ ﺍِﻧِّﻰْ ﺑِﻤَﺎ ﺗَﻌْﻤَﻠُﻮْﻥَ ﻋَﻠِﻴْﻢٌ 
(நம் தூதர்கள்
ஒவ்வொருவரிடத்திலும்:) தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்
(ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)

             (அல்குர்ஆன் : 23:51)

  =============================
  ஜெர்சி போன்ற மாடுகளும்    
                     செயற்கை
        வளங்களும் உருவாகும்
   ! என முன்னறிவிப்பு நபிமொழி !

ஹதீஸ் எண் 5629- நூல் முஸ்லிம்

அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர்
அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும்
அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும்

எந்த அளவுக்கென்றால் பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும்

பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும்
பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்

     அறிவிப்பாளர் - நவ்வாஸ் பின்
                   சம்ஆன் ( ரலி )

               நட்புடன் .J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்