விடை இல்லாத விடயம்
பகுத்தறிவா படைத்தவன்அறிவா ?
!! சிந்தனைக்கான பதிவு !!
<><><><><><><><><><><><><><><><>
26-03 -2017 கட்டுரை எண் 1076
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
உலகில் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகமான இடத்தை பிடித்திருப்பது வசதி வாய்ப்புகளை பெற்றவர்கள் தான்
பாரதூரமான நோய்களால் அதிகம் சிரமப்படுவதும் இவர்கள் தான்
அதே நேரம் ஊட்டமான உணவுகளை விலை உயர்ந்த தரமான உணவுப் பொருள்களை கூடுதலான விலை கொடுத்து அன்றாடம் வாங்கி உண்ணுவதும் இவர்கள் தான்
இவர்கள் உண்ணும் உணவில் தான் ஆரோக்யம் தொடர்பான அதிகமான சத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் மருத்துவர்கள் அடிக்கடி விளம்பரங்களில் குறிப்பிடுகின்றனர்
அப்படியானால் எழைகளை விட ஆரோக்யமாகவும் நோய்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் வசதி படைத்தவர்கள் தான் வாழ வேண்டும் இது தான் மனிதனின் அறிவு தரும் விடையாகும்
ஆனால் நடை முறையில் தரமற்ற பொருள்களை விலை குறைந்த உணவு பொருள்களை அன்றாடம் உண்ணும் ஏழைகள் தான் திடகாத்திரமாகவும் நோய்களை எதிர் கொள்ளும் சிகப்பணுக்களை அதிகம் பெற்றுள்ள நிலையிலும் உள்ளனர்
இது எப்படி ஏன் எதனால் ?
பகுத்தறிவாளர்களால் கூட பதில் சொல்ல முடியாத ஒரு வினாவாகும்
அதே நேரம் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு வல்லமை ஏன் அந்த பகுத்தறிவையே மனிதனுக்கு வழங்கிய வல்லமை உள்ள ஒரு ஆற்றல் ( அதாவது கடவுள்) உள்ளான் என்ற நம்பிக்கை உள்ளோர்கள் மட்டுமே இதற்க்கு விடை கூற முடியும்
உலகில் நடக்கும் எல்லாம் இறைவனின் திருவிளையாடல் அல்லது விதி என்று விதியை நம்புபவனுக்கு மதியை வெல்ல முடியும்
ஆனால் மனிதனின் மதியே இறுதி என்று நம்புபவனுக்கு இதற்க்கு விடை கூற இயலாது
!! சிந்திப்பீர் செயல்படுவீர் !!
يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது
(உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்ல அருளாகவும் உள்ளது
(அல்குர்ஆன் : 10:57)
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம் அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு
(அல்குர்ஆன் : 6:42)
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment