பலதாரமணத்தை முஸ்லிம் பெண்களே வெறுப்பது ஏன்
பலதாரமணம் செய்ய விரும்பும்
கணவனை மனைவியர்கள்
எதிர்ப்பது ஏன் பின்னனி
√√√√√√√√√√√√√√√√√√√√
ஆக்கம் 09-01-16
இஸ்லாத்தின் எல்லா விதமான சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளும் இஸ்லாமிய பெண்கள் தனது கணவன் வேறு ஒரு திருமணம் செய்து கொள்வதை மட்டும் கடுமையாக எதிர்ப்பது ஏன் என்ற கேள்வி அநேகமானவருக்கு உண்டு
தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற அதிகப்படியான எதிர் பார்ப்பும் கணவனின் மீது அவர்கள் வைத்துள்ள பாசமும் தான் இதற்க்கு அடிப்படை காரணமாக ஆகும்
இது போக இன்னும் வேறு சில காரணங்கள் மனைவியர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது
முதல் காரணம்
--------------
இரண்டாம் திருமணம் செய்யதுள்ள அநேகர் இரண்டாம் திருமணத்திற்க்கு எது போன்ற வரம்புகளை இஸ்லாம் விதிக்கின்றதோ அவைகளை மீறி நடப்பவர்களாகவே உள்ளனர்
ஒன்று முதல் மனைவியை முற்றிலும் மறந்தவர்களாகவும் அவர்களுக்குரிய கடமைகளை புறக்கணிக்கக் கூடியவர்களாகவும் வாழ்கின்றனர்
அல்லது இரண்டாம் மனைவியை வைப்பாட்டி என்ற அளவுக்கே ஊருக்கும் தெரியாமல் தனது முதல் மனைவியருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக வெளியூரில் சென்று திருமணம் செய்கின்றனர்
மார்க்கம் அனுமதித்துள்ள ஹலாலான ஒன்று யாருக்குமே தெரியாமல் திருட்டுத்தனமாக நடத்துவதையா இஸ்லாம் சொல்கின்றது ?
நான் உனது கணவன் நீ எனது மனைவி என்பதே திருமணத்தில் செய்யப்படும் ஒப்பந்தமாகும்
மறு திருமணம் செய்யும் போது இன்று முதல் நான் வேறு ஒரு பெண்ணுக்கும் கணவனாக பொறுப்பேற்க போகின்றேன் என்று கூறி பழைய ஒப்பந்தத்தை முறித்து மீண்டும் புதிய ஓர் ஒப்பந்தத்தை முதல் மனைவியரிடம் பெறுவது தானே முறையாகும் இதை இரண்டாம் திருமணம் செய்யும் பலர் பின்பற்றுவதில்லை
இதை பல ஆலிம்கள் ஆதரிப்பதும் அது போல் கணவரின் ஜமாத்திற்க்கும் அவரது ஊருக்கும் மனைவியருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைப்பதும் மார்க்க வரம்பு மீறுதலாகும்
ஒருவரோடு வியாபாரத்தில் முழு நேர பாட்னராக சேர்ந்திருக்கும் ஒருவர் அவரோடு பாட்னராக இருக்கும் ஒருவருக்கு தெரியாமல் வேறு ஒருவரோடு வியாபாரம் செய்வதை ஆதரிக்காத ஆண் இனம் இதை ஆதரிப்பது சுயநல போக்காகும்
++++++++++++
இரண்டாம் காரணம்
---------------
தன்னை திருமணம் செய்துள்ள கணவன் தன்னோடு குழந்தையை பெற்ற பின் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளோடும் குழந்தை ஈன்று விட்டால் தனக்கும் தனது பிள்ளைக்கும் கிடைக்க வேண்டிய பொருளாதார செலவுகளும் சொத்துக்களும் தனக்கு ஈடாக வரும் மனைவி தட்டிச்சென்று விடுவாளோ என்ற பயமும் தனது கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய அனுமதிப்பதற்க்கு முதல் மனைவியருக்கு தடையாக இருக்கின்றது
++++++++++++
நான்காம் காரணம்
------------------------
தனது கணவனின் இல்லறம் உட்பட எல்லா தேவைகளையும் தான் நிறைவேற்றி தரும் சூழலில் வேறு ஒரு பெண்ணையும் அவர் மணமுடித்தால் தனது பெண்மை அங்கு இழிவு படுத்தப்படுகின்றது என்ற ஒரு எண்ணமும் தனது கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முதல் மனைவி அனுமதிக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது
+++++++++++++
இறைவன் அனுமதித்த காரணம்
------------
ஆண் பெண் வெளித்தோற்றத்தில் ஓரளவு ஒன்று போல் காட்சி அளித்தாலும் உடலின் உள் அமைப்பில் பல மாறுதலோடு தான் படைத்துள்ளான்
அது போன்ற மாறுபாடுகளில் ஒன்று தான் காமம் எனும் இச்சை உணர்வாகும்
ஒரு பெண்ணை பொறுத்தவரை அதிகபட்சமாக அவர்களின் காம உணர்வுகள் 50வயதை அடையும் போது மிகவும் குறைந்து விடுகிறது
அதே நேரம் ஒரு ஆடவனை பொருத்தவரை 70வயதில் கூட அவனுக்கு இது போல் விசயங்களில் வீரியம் சிலர்களுக்கு காணப்படும்
சில்மிஷம் மற்றும் விபச்சார விடுதிகளின் பக்கம் படையெடுப்பு போன்றவைகளில் ஆண்களே அதிகம் பிடிபடுவது இதை உண்மை என்று உணர பெண்களுக்கு போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது
தனக்கு 5 பனியாரம் உண்டால் பசியாறும் என்பதற்காக தனது கணவனின் பசிக்கும் 5 என்று வரம்பு கட்டுவது அநியாயமாகும்
அதே நேரம் தனது கணவனின் பசியை மனைவியே உணர்ந்து அதற்க்கு முறை பிரகாரம் அனுமதி தருவார்களானால் இரண்டாம் மனைவியை விட முதல் மனைவியின் மீது பரிவும் பாசமும் தனது கணவனுக்கு ஏற்படும் என்ற எதார்தத்தை முதல் மனைவியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஒரு வேளை முதல் மனைவியே இதற்க்கு உடன்படும் போது அது அவளது கணவனை இரண்டாம் மணம் செய்வதை பாசத்தால் தடுப்பதாக அமைந்து விடும்
ஒரு வேளை கணவர் மறுமணம் செய்தாலும் இரு மனைவியரிடமும் ஓரளவு சரியாக நடக்க வாய்ப்பாகவும் அமையும்
கணவனுக்கு வேறு ஒரு மனைவியின் தேவை அவசியம் என்பதை புரிந்து கொண்டும் இது போன்ற அறிவுப்பூர்வமான காரணங்களை தெரிந்து கொண்டும் இரண்டாம் மணம் புரிய தடையாக முதல் மனைவி இருந்தால் அதை தலைவிதி என்று சகித்து கொள்ளும் கணவன்மார்களும் இருப்பார்கள்
+++++++++++
விளைவுகள்
++++++
அதே நேரம் முதல் மனைவியின் ஆதிக்கத்தை சகிக்க முடியாத கணவனாக இருந்தால் வேறு பல மோசமான முடிவுகளை தான் எடுப்பான்
1- முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்க்குரிய காரணங்களை தேடி அலைவான்
2- முதல் மனைவியின் நிம்மதியை கெடுக்கும் விதமாக அராஜகம் செய்வான்
3- அல்லது கள்ளத்தனமாக பல பெண்களோடு தொடர்பை ஏற்படுத்தி கொள்வான்
4- அது போன்ற தொடர்புகளால் Hiv என்ற எய்ட்ஸ் நோயை பெற்று அதை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தாக்கும் விதமாக பாதிக்கப்படுவான்
5- இவ்வாறு கணவனின் பெயர் கெடும் போது அது உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தை கேலிக்குறியதாக மாற்றி விடும்
இன்னும் இது போல் பல காரணங்களால் தான் இரண்டாம் திருமணம் செய்வோர் மனைவியரிடையே நீதியாக நடக்க மாட்டார்கள் என்று இறைவனே அல்குர்ஆனில் சொல்லி விட்டு இறுதி கட்டமாக பலதார மணத்தை அனுமதிக்கவும் செய்கின்றான்
++++++++++++++
கணவன்மார்கள் உணர
வேண்டியது
--------------
1- உடல் வேட்கை என்பது வித்தியாசமானது சில மாதங்களுக்கு பின்னால் மனிதனின் ரசனை மாறி கொண்டே இருக்கும்
இன்று யாரை ரசிக்கின்றார்களோ அவர்களின் மீதுள்ள ரசனை சில காலங்களில் மறைந்து வேறு நபரின் மீது மாறும் வாய்ப்பே மனிதர்களின் இயல்பாகவே உள்ளது
இந்த ரசனை தான் நம்மை மறு பெண்ணை திருமணம் செய்ய தூண்டுகின்றதா என்பதை யோசித்து பார்த்து அதற்க்கு ஆண்கள் அனைகளை எழுப்ப வேண்டும்
காரணம் நிறங்களும் கனபரிமானங்களும் தான் ஒரு பெண்ணுக்கும் மறு பெண்ணுக்கும் மாறுபடுமே தவிர அதன் இறுதி ரசனை ஒன்று தான்
2- குழந்தை இல்லை என்பதற்காக ஒரு பெண்ணை மறு திருமணம் செய்ய முற்பட்டு அந்த பெண்ணுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்பதற்காக அப்போது வேறு ஒரு பெண்ணை நாம் தேட முடியுமா ?
அவ்வாறு தேடுவது நியாயமா?
குழந்தை பாக்கியம் இறைவனின் நாட்டத்தில் தான் உள்ளதே தவிர ஆண்மையில் இல்லை என்பதை ஆழமாக புரிய வேண்டும்
3- மனைவி இருக்க வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நாடுவோர் உடனடியாக திருமணம் செய்துவிடாமல் மறுமணம் செய்துள்ள இதர அனுபவசாலிகளிடம் பல முறை ஆலோசனை கேட்க வேண்டும்
காரணம் மனைவி இருக்க வேறு ஒரு திருமணம் செய்தவர்களில் அநேகமானவர்கள் அவசரப்பட்டு திருமணம் செய்து தற்போது மீளமுடியாத சூழலில் சிக்கி விட்டோமே என்று அன்றாடம் புலம்பியே வாழ்வை கழித்து மன நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர்
4- பொருளாதாரத்திலும் உடல் வலிமையிலும் புதிதாக திருமணம் செய்யும் நபரிடமும் மனைவியிடமும் சரியாக முடிந்தவரை நீதியாக நடக்க முடியுமா என்பதையும் முற்கூட்டியே யோசிக்க வேண்டும்
--------------------
மனைவியர்கள் அறிய
வேண்டியது
----------
1-ஒரு கணவன் மனதாலும் உடலாலும் ஒரு மனைவியிடம் முழு திருப்தியோடு வாழ்ந்து வந்தால் எந்த கணவனும் மறுமணம் என்ற நிலையை அறவே கற்பனை செய்ய மாட்டான்
ஆனால் முப்பது வயதுடைய ஒரு கணவனே உங்களை விட்டு வேறு ஒரு பெண்ணை மணமுடிக்க முயற்சி செய்தால் உங்களிடம் நீங்கள் புரியாத ஏதோ கோளாறு இருக்கின்றது என்பதை புரிந்து இயல்பாக எதார்த்தமாக நடந்து பழகுங்கள்
2- ஆண்கள் கட்டுப்பாடாக நடந்தாலும் அவர்களின் உணர்வை தூண்டும் விதமாக தங்களது ஆடைகளை நடை பாவனைகளை பொது இடங்களில் நடக்கும் பெண்களே ஆண்கள் மனம் அலைபாய மூல காரணமாக உள்ளனர்
இதனால் வாலிபர்கள் தடுமாறுவதோடு திருமணம் செய்து கட்டுப்பாடோடு வாழும் ஒரு குடும்ப தலைவனும் தடுமாறும் வாய்ப்பு உள்ளது
நமது தவறான நடவடிக்கையால் ஒரு குடும்பத்தலைவனின் மனமும் கெட்டு அதனால் அவன் அவனது மனைவியை வெறுக்கும் சூழலுக்கு ஆளாகின்றானே என்ற மனிதநேய சிந்தனையை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்
காரணம் அந்த குடும்பத்தலைவனின் தடுமாற்றத்தால் இன்று அவன் வழி மாறலாம் நாளை நீங்கள் திருமணம் செய்யும் கணவனும் தடம் மாறலாம் அதனால் பாதிப்பு பெண் இனத்திற்க்கு தான்
------------------கணவன்மார்களின் அழகிய
பண்பு
----------
பொதுவாக ஆண்கள் குறிப்பாக இந்தியர்கள் இதில் பலவீனம் உடையவர்களாக இருந்தாலும் படைத்த நாயன் மறுமணத்திற்க்கு அனுமதி அளித்தும் அந்த அனுமதியை பயன்படுத்தாமல் உள்ளம் ஆசைப்பட்டாலும் கட்டிய ஒரு மனைவியோடு குடும்பம் நடத்துபவர்களே அதிகம் இது கணவன்மார்கள் மனைவியின் மீது வைத்துள்ள பாசத்தையே மறைமுகமாக காட்டுகின்றது
பெண்கள் கேள்வி பட்ட நான்கு நபர்கள் மறுமணம் செய்துள்ளனர் என்பதற்காக ஒட்டு மொத்த கணவன்மார்களும் இவ்வாறு தான் இருப்பார்களோ என்று தகுந்த காரணம் இல்லாது சந்தேகிப்பது தவிர்க்கப்பட வேண்டும்
நட்புடன் .இம்தாதி
Comments
Post a Comment