பாதை மாறும் இளையதலை முறை
பாதை மாறும் இளைய
தலைமுறை
!! பயில்வோரின் அவல நிலை !!
!!=======================!!
15-01-17
-----------------
J. யாஸீன் இம்தாதி
============
கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களிடம் போதை பழக்கம் மறைமுகமாக பரவி வருகின்றது
போதை பொருளை பெறுவதற்க்கு தனது கற்பை கொடையாக்கும் கல்லூரி இளம் பெண்கள் அதிகரிப்பு
திரைப்படங்களில் பார்க்கும் கற்பனை காட்சிகளை தனிமையில் இருந்து கொண்டு தங்களை கதாநாயகர்களாக கதாநாயகிகளாக கற்பனை செய்து ரசிக்கும் உளவியல் நோய்கள் இன்றைய இளைய தலைமுறைகளை அதிகம் பாதித்து உள்ளது
இதன் விளைவே எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் நடைமுறை ரீதியாக ஒப்பாய்வு செய்யும் தன்மை இளையவர்களிடம் குன்றி போய் உள்ளது
நண்பர்களின் மூலம் வழிகெடுவதை விட பெற்றோர்களின் கவனமின்மை காரணத்தாலும் பிள்ளைகளின் மீது குருட்டு நம்பிக்கை வைத்து அவர்களின் நடைமுறைகளை பெற்றோர்கள் கவனிக்க தவறியதாலும் தான் இளைய சமூகம் சீரழிந்து கொண்டுள்ளது
நல்ல பாதைகளை தவிர்த்து உயர் ரகமான கல்வியை பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பதால் அவர்களின் பட்டங்கள் வீட்டில் பெறுமையோடு தொங்குகிறதே தவிர அவர்களின் எதிர்காலமும் மானமும் சமுதாய அரங்கில் கேவளமாக காட்சி அளிக்கிறது
வேதனையுடன் J இம்தாதி
Comments
Post a Comment