தனிமனித வழிபாடு

            
               தனிமனித வழிபாடு

                J.யாஸீன் இம்தாதி

    +++++++++++++++++++++++++

      Bismillahir Rahmanir Raheem
                      ------------

முஸ்லிம் சமூகத்தை வழி கெடுப்பதற்க்கு சைத்தான் வைத்திருக்கும் முக்கிய சாதனமே
தனிமனித வழிபாடு என்ற வழி கேடாகும்

ஒரு மனிதன் தன்னிடம் இல்லாத திறமையை  அல்லது தான் விரும்புகின்ற ஒரு செயலை அல்லது தான் விரும்புகின்ற ஒரு குணத்தை அல்லது தான் ரசிக்கின்ற ஒரு திறமையை வேறு ஒரு நபரிடம் கண்டாலோ அல்லது கேள்வி பட்டாலோ அல்லது காட்சியாக பார்த்தாலோ அவரை நேசிப்பதும் அவருக்காக பல மூடத்தனங்களை மேற்கொள்வது மனிதனின் இயல்பாக உள்ளது

அரசியல்வாதிகளுக்காக தலை முடியை காணிக்கையாக்குவதும் விரலை வெட்டிக் கொள்வதும் பச்சை பூசிக்கொள்வதும் தீக்குளிப்பதும் இதயதெய்வம் தானைத்தலைவன் என்று வரம்பு மீறி புகழ்வதும் இதனால் தான்

சினிமா சீரியல் கூத்தாடிகளின் போலியான நடிப்புகளை பார்த்து அவர்களுக்காக ரசிகர் ரசிகை மன்றங்கள் அமைப்பதும் இதனால் தான்

அவர்களின் கட்டவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வதும் இதனால் தான்

இதே போல் ஒரு வகையை சார்ந்தது தான் ஆன்மீகத்தின் பெயரால் ஏற்படும் தனி மனித வழிபாடு என்ற வழிகேடு

மற்றவர்கள் மீது வைக்கும் பக்தியின் விளைவுகளை விட ஆன்மீகவாதிகள் மீது வைக்கும் குருட்டு பக்தி அந்த மனிதனை பகுத்தறிவுக்கே தொடர்பு இல்லாதவனாக மாற்றி விடும்

ஒருவர் மார்க்கத்தை நன்றாக பேசுகின்றார் அல்லது எழுகின்றார் அல்லது கேள்விகளுக்கு அழகாக பதில் சொல்லுகின்றார் என்பதற்காக அவர் மீது பக்தி கொள்வது

இமாம்களின் பெயரால் சொல்லப்படும் சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் ஒத்து இருந்தால் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை தாண்டி முஸ்லிம்களில் அனைவரும்
நான்கு மத்ஹபுகளில் ஏதாவது ஒன்றை அவசியம் பின்பற்ற வேண்டும் இல்லையானால் அவர்கள் வழிகேடர்கள் என்று  பிரச்சாரம் செய்வதும் தனிமனித வழிபாடு தான்

இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே போதும் என்று சொல்லும் அநேக நபர்களிடமும் இன்று தனிமனித வழிபாடும் துதிபாடும் இன்று மேலோங்கி நிற்கின்றது

அல்லாஹ் ரசூலுக்கு பிறகு ஒரு சஹாபியின் கருத்தை உதாரணமாக அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் கருத்தை உதாரணத்திற்க்கு எடுத்துக் கூறினாலே அவர் யார் ?
சஹாபாக்கள் சொன்னதெல்லாம்
மார்க்கம் ஆகுமா ?
அவர்களும் மனிதர்கள் தானே
அவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா ?

என்றெல்லாம் சஹாபாக்கள் தன் வாழ்வில் செய்து விட்ட சில தவறுகளை பட்டியல் போட்டு பேசி வரும் பலர்கள்

தற்போது சகோதரர்

         P.ஜைனுல் ஆப்தீன் உலவி

என்ற அறிஞர் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருப்பதும் ஒரு குற்றச்சாட்டுக்கு அவர் பதில் கூறும் முன்பே தாங்களாகவே அதற்க்கு சமாதானம் கூறிக் கொள்வதும் காணப்படுகிறது

இந்த நிலை தொடருமானால் இனி வரும் பிற்காலத்தில் இந்த நிலையும் தனிமனித வழிபாட்டை தான் ஏற்படுத்தும்

பலர்கள் இவரை பற்றி முகநூலில் வரம்பு மீறி  புகழ்ந்து ஸ்டேடஸ் போடாமல் இருப்பதும் இல்லை

அவர் சொத்து விசயத்தில்
தூய்மையானவர் அப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர் அவரால் தான் எனக்கு நேர்வழி கிடைத்தது
அவர் ஆற்றிய பணிகளை வேறு
எவரும் ஆற்றியதில்லை என்று புகழ்வதும் தனிமனிதனின் மீது கொண்ட பக்தியின் வெளிப்பாடே

இன்றைய மார்க்க அறிஞர்களில்
உங்களுக்கு பிடித்தமானவர்
யார் ? என்று சில அறிஞர்களின் புகைப்படம் போட்டு ஏதோ நடிகர்களுக்கு கூட்டம் சேர்த்துவது போல் இவருக்கு லைக் கமாண்டுகளை பதிக்க வைத்து அதை ரசிப்பதும் தனிமனித பக்தியின் வெளிப்பாடே

மொபைல் ரிங்டோனிலே ஏதோ அனைவரும் பயான் கேட்பதாக நினைத்துக் கொண்டு அவரது Voice செட் செய்து வைத்திருப்பதும் ஒரு நல்ல முன்னுதாரணம் இல்லை

சம்மந்தப்பட்ட அறிஞர் தோழர் Pj அவர்களே இதில் சிலவற்றை கண்டித்திருப்பதும் உண்மை

( கொள்கை அளவில் நாம் ஏகத்துவ சிந்தனையில் இருந்தாலும் இது போல் நடவடிக்கைகள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அதில் நமக்கு உடன்பாடில்லை )

ஒரு புறத்தில் இவரை ஒரேடியாக உயர்த்தி பேசும் சாரார் இருப்பதை போல் மறுபுறத்தில் இவரை தரம் தாழ்த்தி எழுதுவதும் கிராபிக்ஸ் மூலமாக அசிங்கமான முறையில் இவரது ஸ்டில் போடுவதும் மடமையின் பிறப்பிடமாகும்

ஒரு வகையில் இந்த கீழ்தரமான விமர்சனங்கள் அவர் மீது வேறு சிலர்களுக்கு பக்தி ஏற்படவும்  காரணமாகவும் உள்ளது

இமாம்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்வதும் தனிமனித வழிபாடே

இவரைப் போல் யாருமே இல்லை என்று தனது சுயஅறிவை சுருக்குவதும் தனிமனித வழிபாடே

எனவே ஒரு மார்க்க அறிஞரின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவர் சொல்வதை முடிந்தவரை எடை போட்டு செயல் படுத்துங்கள்

அவருடைய கல்வி ஞானம் பெறுக மறைமுகமாக இறைவனிடம் துஆ செய்யுங்கள்

இதை விடுத்து எதெற்கெடுத்தாலும் வாதம் பேசுவது குர்ஆன் ஹதீஸ் இல்லாத காரியங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கொண்டு திரிவது தனது முகநூல் அல்லது வாட்சப் போன்ற புரபைல் படங்களில் மார்க்க அறிஞர்களின் புகைப்படத்தை அப்லோட் செய்து இன்பம் காணுவது அல்லது இயக்க கொடிகளை போட்டுக் கொண்டு இயக்கங்களுக்காக உழைப்பதை ஏதோ மார்க்கத்திற்காக உழைப்பதாக கற்பனை செய்து கொள்வது

இது போன்ற குணாதிசயங்களை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்

                          ------------

ﺍﺗَّﺨَﺬُﻭﺍ ﺃَﺣْﺒَﺎﺭَﻫُﻢْ ﻭَﺭُﻫْﺒَﺎﻧَﻬُﻢْ ﺃَﺭْﺑَﺎﺑًﺎ ﻣِّﻦ ﺩُﻭﻥِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻤَﺴِﻴﺢَ ﺍﺑْﻦَ ﻣَﺮْﻳَﻢَ ﻭَﻣَﺎ ﺃُﻣِﺮُﻭﺍ ﺇِﻟَّﺎ ﻟِﻴَﻌْﺒُﺪُﻭﺍ ﺇِﻟَٰﻬًﺎ ﻭَﺍﺣِﺪًﺍ ۖ ﻟَّﺎ ﺇِﻟَٰﻪَ ﺇِﻟَّﺎ ﻫُﻮَ ۚ ﺳُﺒْﺤَﺎﻧَﻪُ ﻋَﻤَّﺎ ﻳُﺸْﺮِﻛُﻮﻥَ

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்
ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்
வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்

             (அல்குர்ஆன் : 9:31)

                நட்புடன் . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்