கல்வியில் மதத்தை திணிப்போர்
மத வழிபாட்டை திணிக்கும்
குமரி மாவட்ட கிருஸ்தவ
!! பாடசாலைகள் !!
||=============================||
12-03 -2017 கட்டுரை எண் 1075
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
பள்ளி கூடங்களில் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு போடப்பட்டுள்ள பொதுவான கட்டுப்பாடுகளை பின் பற்றி நடப்பது என்பது அனைத்து மதம் சார்ந்த மதம் சாரா பாடசாலைகளுக்கும் பொதுவான ஒன்றே
அதே நேரம் அந்த பள்ளிக்கூடங்கள் ஒரு மதத்தின் ஆராதனைகளை அல்லது மத சடங்குகளை அனைத்து மாணவ மாணவியர்களும் பின்பற்ற வேண்டும் என்று திணிப்பதும் அல்லது அது போல் இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதும் இந்திய அரசியல் மத ரீதியான உரிமை சாசனங்களுக்கு எதிரானது ஆகும்
அவ்வகையில் குமரிமாவட்டத்தில் கிருஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படும் அநேகமான பாடசாலை மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களை ஜபம் செய்ய சொல்வதும் தேர்வு நேரங்களில் அவர்களின் தலையில் கை வைத்து ஆசி வழங்கும் மோசமான முன்னுதாரணம் பரவலாக அரங்கேற்றப்படுகின்றது
குறிப்பாக குமரிமாவட்டம் குலசேகரத்தில் இயங்கும் சில பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மற்றும் இந்து சமூக மாணவ மாணவியர்களுக்கு இது போல் அதிருப்தி அதிகமாக உள்ளது அதை முறையாக ஆசிரியர்களிடம் அதிருப்தி கொண்ட மாணவ மாணவியர்கள் தெளிவாக வெளிப்படுத்தினாலும் அவர்களும் மத ரீதியாகவே இவர்களின் ஆதங்கத்தை புறக்கணிக்கின்றனர் அதை மீறி நடந்தால் மார்க்குகளில் தங்களுடைய படித்தரத்தை குறைத்து விடுவார்களோ என்ற அச்சமும் மாணவ மாணவியர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் பரவலாக காணப்படுகின்றது இதை அந்தந்த பகுதிகளில் செயல் படும் இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாத்துகளும் முறையாக பள்ளி பொருப்பாளர்களிடம் எத்தி வைப்பது என்பது மார்க்க கடமையாக இருப்பதை மறந்து விட கூடாது அதை அவர்கள் புறக்கணிக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாக அதை எதிர் கொள்வதற்க்கு இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாத்துகளும் தயங்க கூடாது அவ்வாறு தயங்கும் பட்சத்தில் படிக்க கூடிய இஸ்லாமிய இளம் தலைமுறையினர்கள் மாற்றார்களின் கலாச்சாரத்தை நிர்பந்தமாக பின்பற்றும் பாவத்திற்க்கு இவர்களே மறுமையில் குற்றவாளிகளாக மாறுவார்கள் என்பதை மறந்து விட கூடாது
وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى
تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள்
(ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை
(அல்குர்ஆன் : 2:120)
ஆதங்கத்துடன் J. இம்தாதி
Comments
Post a Comment