சாத்தானின் கூட்டாளிகள்

         சிந்தனைக் உரம் பாகம் 1

      Bismillahir Rahmanir Raheem

                         04-11-17

       சாத்தானின் சொந்தங்கள்

             👿-👽-👿-👽-👿-👽-👿

{ ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி }

தினம் ஒரு திருக்குர்ஆன் வசனத்தை பொருள் உணர்ந்து  படிப்பதை  முஸ்லிம்கள் வழக்கமாக்கி இருந்தால் கூட இன்று முஸ்லிம்கள் வழி கேடுகளை விட்டும் தூரமாக விலகி இருப்பார்கள்

ஆனால் அன்றாடம் தினத்தந்தி போன்ற நாளிதழ்களை தவறாமல் படிக்க நேரம் ஒதுக்கும் முஸ்லிம்களுக்கு

அல்லது தொலை காட்சி செய்திகளை தவறாமல்  கேட்பதற்க்கு  நேரம் ஒதுக்கும் முஸ்லிம்களுக்கு

ஒரே ஒரு  திருக்குர்ஆன் வசனத்தை பொருள் உணர்ந்து  படிப்பதற்க்கு  மாத்திரம் சில நிமிடங்கள் ஒதுக்குவது  கூட  அவர்களுக்கு

மலை போல் பாரமாகவும் சலிப்பாகவும் கசப்பாகவும்  தோன்றுகிறது

அல்லாஹ் வழங்கிய திருமறை குர்ஆனோடு தொடர்பு வைத்து ஈமானில் மிளிர வேண்டிய முஸ்லிம் சமுதாயம் இன்று ஆன்ட்ராய்டு மொபைலுக்கு  அடிமை சாசனம் எழுதி கொடுத்திருப்பது தான் மிச்சம் இதுவும் கூட சாத்தானின் எச்சம்

எவ்வகையில் பார்த்தாலும் சாத்தான்களே  நம்மை வென்று வெற்றி படி ஏறி  வருகிறான்

வானவர்களின் நண்பர்களாக இருப்பதை விட சாத்தான்களின் சொந்தங்களாக இருப்பதையே சாதனையாக நினைப்பது தான் நம் சமுதாயத்தின் சாபக்கேடு

وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا

33:34. மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்

            நட்புடன்  J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்