வெள்ளியை வீணடிக்கும் முஸ்லிம்கள்

            !!  வெள்ளியா  தகரமா !!

  !! வார முஸ்லிம்களின் நடைமுறை !!

     <><><><><><><><><><><><><>
                       13-01-16
          !! J. யாஸீன் இம்தாதி !!
            ---------------------------------

வாரத்தில் சிறந்த நாள் வெள்ளிக் கிழமை  என்பது முஸ்லிம் சமுதாயத்தில் வாய் அளவில் மட்டுமே பல காலம் நம்பப்பட்டு வருகிறது

இறைவனின் திருப்தியை பெறுவதற்காக ஒருவர் ஜும்மாவுக்கு செல்வது உண்மை என்றால் அது இறைவனும் இறைதூதரும் சொன்ன நேரத்தில் செல்ல வேண்டும்

காரணம் வணக்க வழிபாடுகள் யாவுமே இறைவன் குறித்த நேரத்தில் துவங்கி இறைவன் குறித்த நேரத்தில் முடிப்பது தான் சரியான பார்வை

ரமலான் மாதத்தின் நோன்புகளை காலை பத்து மணிக்கு நோற்று மாலை ஐந்து மணிக்கு நிறைவு செய்தாலும் அதற்க்கு பெயர் நோன்பு அல்ல

அதே போல் ஜும்மாவிற்க்கு பாங்கு கூறி  அழைக்கப்பட்டவுடன் முஸ்லிம்கள் பள்ளி நோக்கி பயணித்திருப்பது தான் சரியான நெறிமுறையாகும்

ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும்  ஜும்மாவின் கடைசி நேரமே மக்கள்  பள்ளிகளை நிறைக்கும்  நிலையில் உள்ளது

வேண்டா வெறுப்பாக செய்யும் ஒரு காரியத்திற்க்கும் முஸ்லிம்களின்  இந்த காரியத்திற்க்கும்  என்ன வேறுபாடு  ?

அதே நேரம் பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கின்றது என்று சொன்னால் வருடம் ஒரு முறை பெருநாள் தொழுகையை நிறைவேற்றுபவர் கூட நேரமாக பள்ளிவாசலில் நடை பெறும்  கூட்டத்திலே பங்கு கொள்கிறார்  இது அல்லாஹ்வுக்காகவா அல்லது பதவி மோகத்திற்காகவா  ?

பள்ளியின் தோப்புகள் தேங்காய் போன்ற சாதனங்கள் ஏலம் விடப்படுகிறது என்று சொன்னால் ஜமாத் உறுப்பினர்கள்  தாமதமாக செல்வார்களா  ?

திருமண பதிவிக்கு பள்ளிவாசலின் புத்தக பதிவேடு தேவை என்றால் தாமதமாக செல்வார்களா  ?

ஜும்ஆ நேரத்தில் நிகழ்த்தப்படும் உரைகளை வீதிகளில் கடை வைத்திருக்கும் காஃபிர்களும் கூட மறைமுகமாக  செவிமடுக்கின்றனர்

ஆனால் அந்த உரை யாருக்காக  நிகழ்த்தப்படுகிறதோ அந்த முஸ்லிம்கள்  அந்த உரையை யாருக்கோ சொல்லப்படுவதாக நினைத்து கொண்டு  செவிமடுக்க தயங்குகின்றனர்

இந்த மோசமான நிலை மாற வேண்டுமானால் முதலில் ஜும்ஆ யாருக்கு  ? ஜும்ஆ எதற்க்கு ? என்ற தத்துவத்தை முஸ்லிம்கள் புரிய வேண்டும்

இதை புரியாமல் ஜும்மா என்பது ஒரு சடங்காகவே மட்டும்  நம் சமூகத்தில் தொடரும்

வெள்ளிக்கிழமை  எனும் வார்த்தையில் கூட வெள்ளி எனும் வார்த்தை  மதிப்பு இருக்கின்றது

ஆனால் அந்த வெள்ளியை வாரம் ஒரு முறை  சந்திக்கும் முஸ்லிம்களிடமோ அந்த  வெள்ளி கிழமைக்கு  தகரத்தின் மதிப்பு கூட இல்லை என்பதே உண்மை

   !!வருந்துங்கள் திருந்துங்கள் !!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ  ﴿62:9

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுமாகும்

             நட்புடன்   J இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்