நாட்டை ஆள்வோரும் வாழ்வோரும்
தேசத்தை ஆள்வோரின் கல்வி
நிலையும்
தேசத்தை மதிப்போரின் கல்வி
!! நிலையும் ஒப்பீடு பார்வை !!
|<^><^><^><^><^><^><^><^><^><^><^>|
19-05 -2017
கட்டுரை எண் 1089
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
ஒரு குடும்பத்துக்கு முன்னோடி அந்த குடும்ப தலைவன்
ஒரு நாட்டுக்கு முன்னோடி அந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள்
நாட்டு சட்டத்தை ஆளும் வர்க்கமே கடை பிடிக்கவில்லையானால் அந்த நாட்டு மக்கள் அந்த சட்டத்தை கேலி செய்வதும் புறக்கணிப்பதும் சகஜமாக மாறி விடும்
அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் நடுத்தர மக்களோ தங்களது பிள்ளைகளை அரசாங்க பள்ளிகளில் கல்லூரிகளில் இணைத்து படிக்க வைக்கின்றனர்
ஆனால் அரசாங்கத்தை உருவாக்கிய அரசியல் தலைவர்களோ அல்லது அவர்களின் அருவருடிகளோ தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளி அல்லது அதை சார்ந்த கல்லூரிகளில் தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டுள்ளனர்
அரசாங்க பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைத்த நடுத்தர மக்களோ அரசாங்க வேலை கேட்டு கால் கடுக்க நாளுக்கு நாள் அலைந்து கொண்டுள்ளனர்
ஆனால் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்த அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் அருவடிகளோ அவர்களின் பிள்ளைகளுக்கு உடனடியாக அரசாங்க வேலைகளில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறார்கள்
இந்த வழிமுறை மாறாமல் நம் நாட்டில் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாத கனியாகவே காட்சியளிக்கும்
இலவசமாக கிடைக்க வேண்டிய கல்விமுறை இன்று லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் தொடர்ந்து பேரம் பேசப்படுவதற்க்கு இந்த அரசியல்வாதிகளின் வசதிகளும் அவர்களின் தேசப்பற்றின்மையும் தான் மூலமான காரணமாகும்
தரமான கல்வியை அரசாங்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் தருகிறோம் என்று அறிக்கை போடும் அரசியல்வாதிகளுக்கே அதன் தரத்தில் சந்தேகம் இருப்பதால் தான் அவர்களே அதை புறக்கணித்து நடக்கும் அவல நிலை மாறி வருகிறது
அரசாங்கத்தின் அனைத்து வேலைகளும் அரசாங்க பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்ற மக்களுக்கே கிடைக்கும்
மற்ற எவருக்கும் அரசாங்க வேலைகள் கிடைக்காது என்று நம் நாட்டு சட்டங்களை திருத்தினால் மட்டும் தான் நம் நாடும் உருப்படும்
அப்போது தான் நம் நாட்டு அரசியல்வாதிகளும் தரமான கல்வி முறையை சுற்று சூழலை அரசாங்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்படுத்துவார்கள்
மாவட்டத்தை ஆளும் கலெக்டர் குடும்பம் மாநிலத்தை ஆளும் முதல்வர் குடும்பம் நாட்டை ஆளும் பிரதமர் குடும்பம் மற்றும் அவரை சார்ந்த அருவருடிகளின் சந்ததிகள் எங்கே படிக்க வைக்கப்படுகிறார்கள்? எங்கே பட்டம் பெறுகிறார்கள் ? எங்கே வேலைகளுக்கு அமர வைக்கப்படுகிறார்கள் என்ற கணக்கெடுப்பை ஒரே ஒரு நாள் ஆய்வு செய்து பாருங்கள்
அப்போது உங்களுக்கு புரியும்
நாட்டின் மீது அக்கரை கொண்டவர்கள் நாட்டின் சட்டங்களை மதிப்பவர்கள் நம்மை போன்ற அடிதட்டு மக்கள் தான் என்பதை உணர முடியும்
இது போன்ற அரசியல்வாதிகளுக்கு கொடி பிடிப்பதை விட அவர்களின் அரசியல் முன்னேற்றத்திற்க்கு வால் போஸ்டர்களை அச்சடித்து விளம்பரம் செய்வதை விட அவர்களை பற்றிய உண்மைகளை நாட்டு மக்களுக்கு மத்தியில் உடைத்து சொல்வதே தற்போது நம் நாட்டு மக்களின் தலையாய கடமை என்பதை மறந்து விட வேண்டாம்
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: تَجْتَمِعُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ: أَيْنَ فُقَرَاءُ هذِهِ اْلأُمَّةِ وَمَسَاكِينُهَا؟ قَالَ: فَيَقُومُونَ فَيُقَالُ لَهُمْ: مَاذَا عَمِلْتُمْ؟ فَيَقُولُونَ: رَبَّنَا ابْتَلَيْتنَا فَصَبَرْنَا وَآتَيْتَ اْلاَمْوَالَ وَالسُّلْطَانَ غَيْرَنَا فَيَقُولُ اللهُ: صَدَقْتُمْ قَالَ: فَيَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ النَّاسِ، وَيَبْقَي شِدَّةُ الْحِسَابِ عَلَي ذَوِي اْلاَمْوَالِ وَالسُّلْطَانِ
கியாமத் நாளில், நீங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கும் போது, இந்தச் சமுதாயத்தின் ஏழை, எளியோர்கள் எங்கே? என்று அறிவிப்புச் செய்யப்படும்
(அறிவிப்பைக் கேட்டதும்) ஏழை, எளியோர்கள் எழுவார்கள்
நீங்கள் என்ன அமல்கள் செய்தீர்கள்?'' என அவர்களிடம் வினவப்படும். எங்கள் இரட்சகனே!
நீ எங்களைச் சோதித்தாய், நாங்கள் பொறுமையாக இருந்தோம்
நீ மற்றவர்களுக்குச் செல்வத்தையும், ஆட்சியையும், கொடுத்தாய்!'' என்று அவர்கள் கூறுவார்கள்
நீங்கள் உண்மையே கூறினீர்கள்'' என்று அல்லாஹுதஆலா கூறுவான். எனவே, மற்ற பொது மக்களுக்கு முன்னதாக அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்
செல்வந்தர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் கடினமான கேள்வி கணக்குக் கேட்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment