இஷ்ராக் தொழுகை முரண்படும் ஜமாலி
இஷ்ராக் தொழுகை லுஹா
தொழுகை குழப்பும்
ஆலீம் சேக் அப்துல்லா (ஐமாலி)
[[[[==================]]]]
••••••••••••••••••••••••••••••
ஆக்கம். J . யாஸீன் இம்தாதி
*******************
கட்டுரை எண் 1159
¡¡ بسم الله الرحمن الرحيم ¡¡ →←→←→←→←→←→←
05-11-17- ஞாயி கிழமை
***********************
இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள்
சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்று திர்மிதி எனும் நூலில் 535 எண் ஹதீசை வைத்து கொண்டு நம் சமுதாயத்தில் பலர் இஷ்ராக் எனும் தொழுகையை நிறைவேற்றி வருகின்றனர்
ஆனால் இது தொடர்பாக இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமற்றது என்று பல வருடங்களாக சமுதாயத்திற்க்கு நினைவு படுத்தி வருகிறோம்
இஷ்ராக் தொழுகையை சுன்னத் ஜமாத்தை சார்ந்த இமாம்களில் பலர்கள் ஆதரித்து பேசினாலும் தற்போது சுன்னத் ஜமாத் கொள்கைக்கு மாற்றமாக
தமிழக ஆலிம்களில் ஒருவரான சேக் அப்துல்லாஹ் (ஜமாலி) என்பவர் நேரடியாகவே பேசி உள்ளார்
சுன்னத் ஜமாத் மார்க்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் மூன் தொலைகாட்சி தீன் ஒளி எனும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் 05-11-17 ஞாயிறு காலை ஆறு மணியளவில் இந்த தகவல் ஒளிபரப்பு செய்யப்பட்டது
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் மத்ஹப் நூல்களிலும் இஷ்ராக் தொழுகை சொல்லப்படவில்லை என்பதே சேக் அப்துல்லாஹ் (ஜமாலி)அவர்களின் நேரடி வாக்கு மூலம்
இத்தோடு சேக் அப்துல்லாஹ் (ஜமாலி )அவர்கள் தனது பதிலை நிறுத்தி இருந்தால் அது பாராட்ட தக்கதே
ஆனால் இஷ்ராக் தொழுகை நேரடியாக ஹதீஸ்களில் இல்லை என்று அழுத்தமாக சொல்லி கொண்டே இமாம் கஜ்ஜாலி என்பவர் மட்டும் இஷ்ராக் தொழுகையை அங்கீகரித்துள்ளார் என்றும்
அதற்க்கு காரணம் லுஹா தொழுகையை தான் இஷ்ராக் தொழுகை என்று கஜ்ஜாலி இமாம் குறிப்பிடுகிறார் என்றும் எனவே இது வரை இஷ்ராக் தொழுகையை கடைபிடித்து வருவோர் அதை யாருக்காகவும் விட்டுவிட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தனக்கு தானே முரண்பட்டு நடைமுறையில் இருக்கும் பித்அத்தான இஷ்ராக் தொழுகைக்கு வக்காலத்து வாங்கியும் பேசி உள்ளார்
ஹதீசில் நேரடியாக இஷ்ராக் தொழுகை இல்லை என்று சொன்னால் இல்லாத ஒரு தொழுகைக்கு இஷ்ராக் என்று பெயர் வைத்தது யார் ?
அல்லது இமாம் கஜ்ஜாலி அவர்களுக்கு லுஹா தொழுகையை இஷ்ராக் தொழுகை என்று பெயர் மாற்றி வைக்க அதிகாரம் தந்தது யார் ?
அவ்வாறு ஒரு அதிகாரம் இமாம் கஜ்ஜாலி அவர்களுக்கு உண்டு என்று சொல்ல ஆலீம் சேக் அப்துல்லா (ஜமாலி) என்பவருக்கு அதிகாரம் தந்தது யார் ?
என்று மக்கள் சிந்திக்க கடமை பட்டுள்ளார்கள்
இஷ்ராக் தொழுகையும் லுஹா தொழுகையும் ஒன்று என்று ஜமாலியும் கஜ்ஜாலி இமாமும் குறிப்பிடும் வாதமும் அர்த்தம் அற்றது
காரணம் நம் சமூகத்தில் இஷ்ராக் என்ற தொழுகையும் லுஹா என்ற தொழுகையும் வேறு வேறாக மட்டுமே தொழப்பட்டு வருகிறது
பித்அத்துக்கும் சுன்னத்துக்கும் சரியான விளக்கத்தை பொது மக்கள் படிக்காத வரை இது போல் அறிஞர்களின் அறியாமை தொடரவே செய்யும்
நஊதுபில்லாஹ்
وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ
மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்
(அல்குர்ஆன் : 24:48)
நட்புடன் . இம்தாதி
Comments
Post a Comment