குடியரசு தினம் ஓர் சடங்கே

    !!    ஆண்டு குடியரசு தினம்  !!

                      ஓர் சடங்கே

  <><><><><><><><><><><><><><><><>
                   !!  26-01-2017 !!
      Bismillahir Rahmanir Raheem
             ---------------------------------
             !J. யாஸீன் இம்தாதி!
                 ++++++++++++++

நாட்டில் வாழும் குடிமக்களை அழகிய முறையில்  ஆளுமை  செய்ய ஏற்படுத்தப்பட்ட அரசமைப்பை நினைவுபடுத்துவதே குடியரசு தினம்

தாயின் மீது ஏற்படும் நம்பிக்கையை போலே மக்களை  ஆளும் அரசின் மீதும் நம்பிக்கையை குடிமக்கள் எப்போது வைக்கிறார்களோ அது தான் சிறந்த குடியரசு தினம்

குடியரசு தினத்தை நினைவு கூறும் தேதிகளில் கூட மக்களை ஆளும் அரசின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இல்லை என்றே சொல்லலாம்

அந்தளவு மக்களை ஆளும் அரசு மக்களை விட்டு அந்நியப்பட்டுள்ளது 

ரவுடிகள் பொறுக்கிகள் மூலம் வரும் ஆபத்துகளை காவல் துறையினர்கள் மூலம் தடுக்க வேண்டிய அரசாங்கமே தங்கள் காவல்துறையை பயன்படுத்தி  தெரு பொறுக்கிகளை விட மோசமாக நடக்கின்றனர் என்பதையே சமீபத்தில் அறவழியில் நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல் தறையினர்களின் அத்து மீறல்  மூலம் மக்கள் உணர்ந்து கொண்டனர்

மாநிலத்தை ஆளும் அரசவை சீர்கேட்டை சீர் செய்யும் இடத்தில் இருப்பதே மத்திய அரசாங்கம்

ஆனால் இது போன்ற சீர்கேட்டை கள்ளத்தனமாக தூண்டி விடுவதே மத்திய அரசாங்கம் என்பதே மிகவும் வேதனையான விசயம்

அறவழி போராட்டம் நடத்த ஒன்று கூடிய மக்களை  வேசிகள் என்று வர்ணிப்பது வேசிகளோடும் தாசிகளோடும் கள்ளத்தனமாக உறவுகளை வைத்திருப்பது நாட்டின் பொருளாதாரத்தை சீர் குழைத்தது குடிமக்களான விவசாயிகளின் தற்கொலை சாவுகளுக்கு காரணமாக இருந்தது  இப்படி பல சாதனைகளுக்கு உரிமையாளர்கள் போலவும்  சொந்தக்காரர்கள் போலவும் நடந்து கொண்டிருப்பது மத்திய அரசாங்கம்

ஒரு வகையில் எந்த வெள்ளை கார ஆட்சியை கொடூரம் என்றும் அடிமை தனம் என்றும் கூறி சுதந்திரத்தை வாங்கினார்களோ  அந்த வெள்ளையன் ஆட்சியே இவர்களை விட பல மடங்கு மேல் என்பதையே மக்கள் தற்போது விளங்கி உள்ளனர்

வெள்ளையன் கட்டி கொடுத்த மேம்பாலங்களும் அனைகளும் நீர் குளங்களும் தான் இன்றும் கூட இந்திய  மக்களுக்கு பலன் தரும் விதத்தில் அமைந்துள்ளது

சுதந்திர தினமாக இருந்தாலும் குடியரசு தினமாக இருந்தாலும் அதை ஆளும் அரசுகள் தான்  சடங்காக கொண்டாடி வருகிறதே தவிர இந்திய குடிமக்கள் அதை மனப்பூர்வமாக கொண்டாடி வருகிறார்கள் என்பதும் கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மையே

       வருத்தத்துடன் . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்