மோடிமஸ்தான் வேலை பார்த்த மோடி

நிஜமான இந்தியாவில் நிழலான    
        !!கற்பனையே டிஜிட்டல் !!

          செல்லாத நோட்டு திட்டம்
              செல்லாகாசானது ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
                  09-0-1-2017
               ×==========×

      ஆக்கம் J. யாஸீன் இம்தாதி

      +++++++++++++++++++++++++

குறிப்பிட்ட நாளில் நல்ல மாற்றங்கள் எற்படலாம் என்று சொன்னால் அது எதிர்பார்ப்பு

குறிப்பிட்ட நாளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட கூடும் என்றால் அது சந்தேகம்

குறிப்பிட்ட நாளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவேன் என்று சவால் போட்டால் அது உறுதி மொழி

இதில் மூன்றாம் நிலையில் ஒருவர் சவால் போட்டு அதில் வெற்றியும் காணாது படு தோல்வியை அடைந்தால் அதில் அவர் வாக்குறுதி கொடுத்த மக்களை ஏமாற்றினார் என்பது மட்டுமல்ல எந்த ஒரு திட்டத்துக்கு  அவர் வாக்குறுதி கொடுத்து சவால் போட்டாரோ

அந்த ஒன்றை பற்றிய ஞானமோ அல்லது அறிவாளிகளின்  ஆலோசனைகளை கேட்காமல் தான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்  என்பது மட்டுமே உண்மை

புதிய நோட்டை அச்சடித்து பழைய நோட்டை தள்ளு படி செய்து நம் இந்திய திருநாட்டை டிஜிடல் முறை இந்தியாவாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தவர்

       நம் பாரத பிரதமர் நரேந்திர
                           மோடி

அவர் வாக்குறுதி அளித்தது போல் புதிய நோட்டையும் அச்சடித்து வெளியிட்டார்

பழைய நோட்டையும் செல்லாததாக அறிவித்து ஒட்டு மொத்த இந்திய  மக்களின்  பொருளாதாரத்தையும் அரசாங்கத்தில் திருப்பி வாங்கி கொண்டார்

ஆனால் டிஜிட்டல் இந்தியா என்பது மட்டும் கானல் நீராக போய் விட்டது

குடி மக்களின் கண்களில் வழியும் நீர் மட்டும் தற்போது நிஜமான நீராகவும் மாறி விட்டது

சீராக நடை பெற்று வந்த ஒட்டு மொத்த வியாபாரம் சீர்குழைந்து போய் விட்டது

குடிமகன் உழைத்து ஈட்டிய பணத்தை கூட தான் நினைத்த நேரத்தில் செலவு செய்ய முடியாத நிலையே மக்கள் நிலையாக பல மாதம் நீடித்தது

எந்த நாடுகள் பூமி வளம் குன்றிய நாடாக உள்ளதோ படித்தவர்கள் நிறைந்த நாடாக உள்ளதோ அது போன்ற நாடுகள் தான் டிஜிட்டல் முறையை கை கொள்வது பொறுத்தமாகும்

நம் இந்திய திருநாட்டை பொருத்த வரை அறுபது சதவிகிதம் விவசாயம் செய்யும் வேளாண்மை சார்ந்த பூமியாகும்

வேளாண்மை சார்ந்திருப்போர் இன்று வரை கோவனத்தை கட்டி கொண்டு தான் வேலை பார்க்கின்றனர் தங்களது உடைகளில் கூட மாற்றத்தை விரும்பாதவர்கள் கல்வி ஞானம் குறைந்தவர்கள் டிஜிட்டல் இந்தியாவை வர வேற்பது சாத்தியமா ?

மனமாற்றம் எற்படாது கருப்பு பணத்தை ஒழிக்க இயலாது

உங்களிடம் நான் நூறு ரூபாயை கொடுத்து அதற்க்கு பொருளை பெற்று கொண்டு பில் வாங்கினால் அது வெள்ளை பணம் அதே நூறு ரூபாயை கொண்டு நீங்கள் பில் இல்லாது ஒரு பொருளை வாங்கினால் அதே பணம் தான் கருப்பு பணம்

ஆக நல்ல பணத்தை கருப்பு பணமாக மாற்றுவதும் வெள்ளை பணமாகவும் மாற்றுவது மனிதனின் தவறான நடைமுறையே தவிர ரூபாய் நோட்டுக்களை புதிதாக அச்சடிப்பதாலோ அல்லது இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை தள்ளுபடி செய்வதாலோ ஏற்படுவது இல்லை

இதுவரை அரசாங்கம் பிடித்துள்ள கருப்பு பணத்தில் கோடிக்கணக்கான புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டிருப்பதும் இதற்க்கு சரியான ஆதாரமாகும்

எனவே நோட்டை காட்டி நாட்டை மாற்றுவேன் என்று நரேந்திர மோடி சூளுரைத்தது மோடி  மஸ்தான் செய்யும் கண்கட்டு  வேலையாகும்

அந்த மோடி மஸ்தான் வேலையை தான் நம் இந்திய பிரதமர்

       நரேந்திர மோடி மஸ்தான்

செய்து விட்டார் என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி

புரட்சிகள் சட்ட ரீதியாக எழாமல் விடிவு காலம் மலர போவது இல்லை

             நட்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்