ஸ்கூல் பஸ்களில் சீரழிக்கும் பாடல்கள்
மாணவ மாணவியர்களை
சீரழிக்கும்
கல்லூரி வாகனங்களும்
!! ஓட்டுனர்களும் !!
><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><
15-02-2017
கட்டுரை எண் 1071
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
கல்வி கண்ணை திறக்கும் என்பார்கள் ஆனால் கல்வியை படிக்க அழைத்து செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வழிகேட்டின் வாசல்களை தான் தற்போது திறந்து வைத்துள்ளது
காலையில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்க்கு மாணவ மாணவியர்களை அழைத்து செல்லும் வாகனங்களில் அந்த வாகனத்தை ஓட்டும் அதிகமான ஓட்டுனர்களே உளவியல் ரீதியாக மாணவ மாணவியர்களை வழிகெடுக்க முதல் காரணமாக அறிந்தோ அறியாமலோ காரணமாக உள்ளனர்
ஓசையோடு கூடிய ஆபாசமான அருவெருப்பான கற்பனை மிகுந்த திரை இசை பாடல்களை தான் எப்போதும் வாகனங்களில் எந்நேரமும் ஒளிக்க செய்கின்றனர்
அதி காலை பகுத்தறிவை படிக்க செல்லும் மாணவ மாணவியர்கள் வாகனங்களில் ஒளிபரப்பப்படும் சினிமா கற்பனை பாடல்களில் நடிக்கும் கூத்தாடிகளை போலவே தங்களை ஹீரோவாக ஹீரோயின்களாக கற்பனை செய்து கொண்டே பயணிக்கின்றனர்
நிஜவாழ்வை ரசிக்காது நிழல் வாழ்வை நிஜமாக நினைக்கும் மனப் போக்கு இதனால் தான் இன்றைய இளைய தலைமுறையிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது
காதலன் இல்லாத மாணவியோ காதலி இல்லாத மாணவனோ இல்லை என்று சொல்லும் அளவு இன்று வயதுக்கு வராத மாணவ மாணவியர்களின் நிலை கூட மாறி இருப்பதற்க்கு இதுவும் ஒரு காரணம்
சமீப காலமாக கூத்தாடிகளால் எடுக்கப்படும் திரைப்படங்கள் கூட கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களை மையமாக வைத்து காதல் படங்களாக வலம் வருவது இதற்க்கு பின்னனியாக அமைந்துள்ளது
கல்லூரிகளுக்கு அழைத்து செல்லும் தனியார் வாகனங்களும் ஏன் கல்லூரி சார்பாக அனுப்பப்படும் வாகனங்களும் கூட திரைப்பட பாடல்களை ஒளிக்க வைத்து கொண்டு தான் பயணிக்கிறது
மாணவ மாணவியர்களை வைத்து வருமானம் பார்க்க வேண்டும் என்ற சிந்தனை தான் கல்லூரிகளுக்கு இருக்குமே தவிர அவர்களின் ஒழுக்க விசயங்களில் அக்கரை செலுத்த வேண்டும் என்ற தாய்மை உணர்வு ஆசிரியர் ஆசிரிகைகளுக்கோ அதன் நிர்வாகிகளுக்கோ இருப்பது இல்லை என்றே நினைக்க தோணுகின்றது
இவைகளை வன்மையாக கண்டிப்பதோடு பிள்ளைகளை அழைத்து செல்லும் வாகன ஓட்டுனர்களிடம் திரைப்பட பாடல்களை தவிர்க்க வலியுருத்த பெற்றோர்களும் பொறுப்பாளர்களும் அவசியம் வலியுருத்த வேண்டும்
கல்லூரி வாகனங்கள் இது போல் ஒழுக்க கேடுகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து இருந்தால் கல்லூரி நிர்வாகிகளிடம் இதற்க்கு எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும்
கல்வித்துறை அமைச்சருக்கு இதை எத்தி வைப்பதோடு கல்வி அமைச்சரும் இந்த ஒழுக்க கேடுகளை நீக்குவதற்க்கு தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்
நாளைய சமுதாயம் சீர்கெட்டு போவதற்க்கு கல்வியை படிக்க வைக்க செல்லும் வழிமுறையே மூல காரணமாக இருப்பது அவமானச் சின்னமாகும்
عَنْ اَيُّوْبَ بْنِ مُوْسَيؒ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ 1 اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ اَفْضَلَ مِنَ اَدَبٍ حَسَنٍ
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விடச் சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தன் பாட்டனார் வாயிலாகத் தம் தந்தை கூறியதாக ஹஜ்ரத் அய்யூப் (ரஹ்) அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment