சிந்தனையே பகுத்தறிவு
சிந்தனையில் கடவுளை
!! உரசிப் பார் !!
கடவுளின் பெயரால் ஆன்மீக குருமார்கள் செய்யும் அட்டூழியம் ஏமாற்றல் ஒரு புறம்
இதன் விளைவாக கடவுள் மறுப்பு எனும் நாத்தீக கொள்கை மறு புறம்
பிள்ளைகள் ஒழுக்கமற்று வாழ்வதால் தவறுகளை தொடர்ந்து செய்வதால் அந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இல்லை என்றோ அல்லது அவர்கள் பல தகப்பனுக்கு பிறந்தார்கள் என்றோ எந்த அறிவாளியும் கூற மாட்டான்
அதே போல் தான் கடவுள் மறுப்பு கொள்கை என்பதும் அறிவுக்கு முரண்பட்டது
கடவுள் இல்லை என்று சொல்வதற்க்கு இது ஏற்ற வாதமே அல்ல என்பதை பகுத்தறிவு பேசுவதாக பெறுமை பேசும் நாத்திகர்கள் உணரவில்லை
எல்லா வல்லமை கொண்ட ஏக பிரம்மன் தான் மனித சமுதாயமாகிய நம்மை படைத்தான் என்று சொல்வதை இழிவாக கருதும் இவர்கள்
மனித படைப்பை விட தரம் தாழ்ந்த குரங்கிலிருந்து தான் மனிதர்களாகிய நாம் பரிணாமம் பெற்றோம் என்று அறிவுக்கு முரணாக பெருமை பட பேசுகின்றனர்
!!கடவுள் உண்டா இல்லையா !!
கடவுள் இல்லை என்றால் அதற்க்கு உரிய அறிவார்த்தமான காரணம் என்ன ?
கடவுள் உண்டு என்றால் அதை நிரூபணம் செய்ய அறிவார்த்தமான காரணம் என்ன இவைகளை அறிவுப்பூர்வமாக உணர முடியாத எவராலும் தீர்க்கமான தெளிவை பெறவே முடியாது
சிந்தனை J இம்தாதி
Comments
Post a Comment