குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு
குடிமக்களை குடிகாரமக்களாக்கும்
திரை கூத்தாடிகளும்
||===அரசாங்க அதிபர்களும் ===||
|<^><^><^><^><^><^><^><^><^><^><^>|
21-05 -2017 கட்டுரை எண் 1089
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
நான்கு நண்பர்கள் ஒரு இடத்தில் இணைந்தாலே அவர்கள் குடியோடும் அந்நிய பெண்ணோடும் தான் இருப்பார்கள் என்ற நச்சுக்கருத்தை காட்சிகளாகவும் பேச்சுக்களாகவும் சினிமாவை தயாரிக்கும் அனைத்து கழிசடைகளும் அதில் நடிக்கும் அனைத்து ஆண் பெண் கூத்தாடிகளும் திட்டமிட்டே திரைப்படம் எடுக்கின்றனர்
வீட்டில் கட்டுப்பாடுகளோடும் இறையச்சத்தோடும் வளரும் சந்ததிகள் கூட இந்த கழிசடைகள் நடித்த திரைப்படங்களை அன்றாடம் தொலைகாட்சிகள் ஒளிபரப்புகிற காரணத்தால் சீரழிவுகளை நோக்கி பயணித்து இளைய பருவத்திலேயே வாழ்வை தொலைத்து வருகின்றனர்
ஒரு காலத்தில் ஆண் குடிகாரர்களே நம் சமூகத்தில் மிகைத்து இருந்தனர் தற்போது அதே சதவிகிதம் பெண் குடிகாரிகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர் சினிமாவை தணிக்கை செய்யும் அரசாங்க அதிகாரிகள் கூட இது போன்ற தரம் கெட்ட காட்சிகளுக்கு A சட்பிகேட் B சட்பிகேட் என்றெல்லாம் அனுமதி வழங்கி வருவது தான் வேதனையான விசயமாக உள்ளது
இதற்க்கு அடிப்படை காரணம் மக்களின் நலனில் அக்கரை செலுத்த கடமைபட்டுள்ள அரசாங்கமே மதுபானக்கடைகளின் மூலம் வருகின்ற வருமானத்தை வைத்து தான் மக்களாட்சி செய்ய முடியும் என்ற போதையில் மூளையை இழந்து உள்ளனர்
அரசாங்கத்தின் சார்பாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மாத்திரம் காந்தியின் புகைப்படத்தை போட்டு நாட்டு மக்களை ஏமாற்றுகின்றார்களே தவிர மதுபானத்திற்க்கு எதிராக களம் இறங்க வேண்டும் என்ற காந்தியின் அடிப்படை கொள்கையை கழிவறையில் எறிந்து விட்டனர்
இந்த மதுபானத்தை தொடர்ந்து அருந்தி வருவதால் தகப்பன் தனது வீட்டு கடமைகளை மறந்து குப்பை தொட்டிகளின் ஓரம் படுத்திருக்கும் தெரு நாய்களை போல ரோடுகளிலும் குப்பை மேடுகளிலும் துணிமணிகளை களைந்து நிர்வாணமாக சுயமரியாதை இழந்து போதை மயக்கத்தில் பிரழுகின்றனர்
இது போன்றோரின் அருகில் செல்லும் போதே எடுக்கும் துர்வாடையால் இல்லறம் வெறுத்து பல தம்பதிகள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் கள்ள தொடர்புகளையும் அன்றாடம் பார்க்க முடிகின்றது
குடி குடியை கெடுக்கும் குடி பழக்கம் நாட்டையே கெடுக்கும் என்று விளம்பரத்தையும் மதுபான பாட்டில்களிலேயே அச்சடித்து விட்டு குடிமக்களின் குடியை நாங்களே கெடுக்கின்றோம் நீங்கள் கவலை படாதீர்கள் என்று தங்களது மதுபான ஈடுபாட்டை கூச்சமின்றி வெளிப்படுத்தி வருகின்றனர்
நாளடைவில் நம் நாட்டு மக்களை
!! குடிமக்கள் !!
என்று சொல்லுவதை விட
!! குடிகார மக்கள் !!
என்று சொல்லும் அளவு நம் நாட்டின் நிலை மோசமாக மாறி வருகிறது
இந்த போதை பழக்கத்தை காலேஜ் பயிலும் இளைய பெண்களுக்கு திட்டமிட்டு ஏற்படுத்தி அவர்களின் கற்பை சூறையாடி அவர்களின் ஒட்டு மொத்த வாழ்கையை சீரழிக்கும் வாலிப பட்டாளங்கள் இன்று கிராமங்களில் கூட பெருகி வருகின்றனர்
பெற்றோர்கள் கவனம் தவறினால் நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளால் தான் நீங்கள் நம் சமூகத்தில் இழிவை சந்திப்பீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்
ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்
(அல்குர்ஆன் : 5:90)
اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான் எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர்ஆன் : 5:91)
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment