குடிகாரர்களை ஊக்குவிக்கும் அரசாங்கம்
குடிகாரர்களாக குடிமக்கள்
!! சீரழிக்கும் அரசாங்கம்! !
===========================
02-04 -2017
கட்டுரை எண் 1076
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
உழைக்கும் பணத்தில் சரிபாதி தொகையை குடிப்பதற்காக மட்டும் செலவிடும் குடிமக்களே நம் நாட்டு குடிமக்களாக மாறி விட்டனர்
ஐந்து நிமிட நேரம் கழிவறையில் இருப்பதற்கே முகம் சுழிக்கும் மனிதன் அன்றாடம் குடித்து விட்டு தனது வாயை கழிவறையை விட மோசமான துர்வாடையோடு சுற்றுவதை தான் பெருமையாக கருதுகின்றனர்
இது போன்றவர்களால் இல்லறம் கெட்டு புலம்பும் குடும்ப பெண்கள் ஒரு புறம்
குடிகாரன் பெற்ற மகள் அல்லது பெற்ற மகன் என்ற காரணத்திற்காக அவமானத்தோடு சுற்றும் வாரிசுகள் ஒரு புறம்
குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் உயிர்களை இழக்கும் அப்பாவிகள் ஒரு புறம்
குடி குடியை கெடுக்கும் என்று அதன் பாட்டில்களில் விளம்பரம் போட்டு கொண்டே நாட்டு மக்களின் குடியை கெடுக்கும் அயோக்கிய அரசாங்கம் ஒரு புறம்
வருமானம் வருகிறது என்பதற்காக பெற்ற பெண் பிள்ளைகளை விபச்சாரத்திற்க்கு அனுப்பும் இழி பிறவிகளும் மதுபானக்கடைகளை நடத்தும் அரசாங்கமும் அதில் வேலை பார்க்கும் ஊழியர்களும் பாவத்தில் சமமானவர்களே
ஆண்களோடு அறிவில் திறமையில் போட்டி போட வேண்டிய பெண் இனம் சுதந்திரம் எனும் பெயரில் உரிமை எனும் பெயரில் குடிகாரிகளாக வலம் வருவது தற்போது மிகைத்து விட்டது
இது போன்ற பெண்களால் பெண் இனத்திற்க்கே தலை குனிவு ஏற்படுகிறது என்பதை உணரும் எவரும் இது போன்ற தரிகெட்ட பெண்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்காமல் இருக்க முடியாது
கழிவு ஓடைகளில் உணவு தேடி சுற்றும் பன்றிகள் கூட மதுபானக்கடைகளை சுற்றி வருவது இல்லை
பெருநாள் திருநாள் என்று வந்தவுடன் மதுபானம் அருந்துவதையே மகிழ்ச்சியாக கருதும் மக்களை எச்சரிக்கை செய்யாமல் இருக்கும் ஆன்மீக குருமார்களே மதங்களின் பெயரால் வழி கெடுக்கும் முதல் துரோகிகள்
குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்யம் தரும் தேன் பாட்டில்களை வாங்குவதற்க்கு யோசிக்கும் தகப்பன் அன்றாடம் மதுபாட்டில்களை வாங்கி வருவது தான் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கழிசடை வளர்ச்சியாகும்
திரைப்படம் என்றாலே நண்பர்களுக்கு மத்தியில் மதுபானத்தை அருந்தும் விதமாக காட்சிகளை வடிவமைக்கும் கேடு கெட்ட ஈன கூத்தாடிகளை செருப்பில் அடித்து விரட்டும் காலம் என்று வருகிறதோ அன்று தான் விபச்சாரத்தை மலிவாக்கும் சினிமா கூத்தாடிகளை வழிகாட்டிகளாக கருதும் இளைய தலை முறையினர்கள் முற்றிலும் உருப்படுவார்கள்
++++++++++++++++++++++++
4620. அனஸ்(ரலி) அறிவித்தார்
(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) போரிச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்
அபுந் நுஅமான்(ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் இப்னு சலாம்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்ததாவது
அனஸ்(ரலி) கூறினார்
(மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்
அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள்
அவர் அவ்வாறே அறிவித்தார்
இதைக் கேட்டதும் அபூ தல்ஹா(ரலி), 'வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)' எனக் கூறினார்கள். உடனே நான் வெளியே சென்றேன்
(பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), 'இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்' என்று சொன்னேன்
அதற்கு அபூ தல்ஹா(ரலி) என்னிடம்,'நீ போய், இதைக் கொட்டிவிடு!' என்று கூறினார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) போரிச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், '(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!' என்று கூறினார்
அப்போதுதான் 'இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில் ) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.' எனும் (திருக்குர்ஆன் 05:93 வது இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்
ஸஹீஹ் புகாரி
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்
ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்
அல்குர்ஆன் - 5-90
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment