சேரமான் மஸ்ஜித்
நபிகளாரும் தமிழ் மன்னர்
சேரமானும்
இந்தியாவின் முதல் பள்ளி
வரலாற்றுப் பார்வை
ஆக்கம் ★ J. யாஸீன் இம்தாதி
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
இது நாம் முகநூலில் பதிவு செய்த முப்பத்தி எட்டாம் கட்டுரை
23-03-14--- சனிக்கிழமை
^ ^ ^ ^ ^ ^ ^ ^
NB- நபிகளாரும் தமிழ் மன்னர்
சேரமானும்
இந்தியாவின் முதல் பள்ளி
வரலாற்றுப் பார்வை
ஆக்கம் ★ J. யாஸீன் இம்தாதி
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
வரலாறு தன்மை நிலை
----------------------
நபி ( ஸல் ) அவர்கள் இறைத்தூதராக இருப்பதாலும் அவரின் நடைமுறைகளை அனைத்து மனிதர்கள் பின்பற்றுதல் அவசியம் என்பதற்காகவும் அவர்களின்
வரலாறுகளை மாத்திரம் அல்லாஹ் பலமுறைகளில் முழுமையாய் பாதுகாத்துள்ளான்
மற்ற வரலாறுகளை பொருத்தவரை அவைகள் அனைத்தும் நூறு சதவிகிதம் உண்மை என்று சொல்ல முடியாது
முழுவதும் பொய் என்றும் தக்க காரணமில்லாமல் சொல்லவும் முடியாது
காரணம் மனிதர்களின் அறிவிப்பில் மறதி இருக்கலாம் தவறு இருக்கலாம் பக்தி இருக்கலாம் கோபமிருக்கலாம்
எனவே வரலாறுகளை ஒப்பாய்வு செய்து ஏற்றுக் கொள்வதே சரியான முறையாகும்
சேரமான் பெருமாள் வரலாறை பொருத்தவரை ஒப்பாய்வின் மூலம் உறுதியாக்கப்பட்ட தகவல் ஆகும்
பழமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை நமது முஸ்லிம் முன்னோர்களுக்கு குறைவாக இருந்த காரணத்தினாலும்
எதிரிகளின் சூழ்ச்சியினாலும் சேரமான் பெருமாளின் வரலாற்றில் பல பகுதிகள் மறைக்கப்பட்டன அதன் மூலம் பல உண்மைகள் மூடி மறக்கடிக்கப்படது
ஆனாலும் ஒரு சில வலுவான ஆதாரங்களையும் காலம் காலமாக சொல்லப்பட்டும் நம்பப் பட்டு வரும் நம்பிக்கைகளையும் செய்திகளையும் ஆய்வோடு பார்த்தால்
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து வந்த காலத்திலேயே இஸ்லாம் நமது இந்தியாவில் நுழைந்தது விட்டது என்றும்
அதற்க்கு சேரமான்பெருமாள் மன்னர்களில் ஒருவர் தான் காரணமாக இருந்திருக்கின்றார் என்றும்
கேரளாவில் அமைந்துள்ள
கொடுங்கலூரில் பகுதியில்
சேரமான் மஸ்ஜித் என்ற
ஜீம்ஆ மஸ்ஜித் தான் இந்தியாவின் முதல் பள்ளிவாசலாக இருக்கலாம் என்றும் தெளிவாகத் தெரிகின்றது
நபிகளார் நிகழ்திய அற்புதமும்
கீழ் சம்பவத்தை வலுவூட்டும்
ஆதாரமும்
--------------------------------------
நபி ( ஸல் ) அவர்கள் தன்னை இறைவனின் தூதர் என்று அறிமுகம் செய்த போது அதை மறுக்காமல் உடனடியாக ஏற்றவர்களும் வரலாறில் உண்டு
இறைவனின் தூதர் என்பதற்க்கு அதிசயமான சில அற்புதங்களையும்
இறைவனின் அனுமதியின் பெயரில் நபியவர்கள் நிகழ்த்தி காட்டினார்கள்
அதில் ஒன்று தான் நபியவர்கள்
நிலவை இரண்டு துண்டாக பிரித்து மீண்டும் இணைத்துக் காட்டிய அற்புதம்
இது நபியவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்க்கு ஐந்து வருடங்களுக்கு முன் நடை பெற்றது
விரிவாக அறிவதற்கு புகாரி 3636--4864--4865
எண்களை அவசியம் பார்வையிடவும்
பூமியின் துணைக்கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்துள்ளவர்கள்
சந்திரன் இரண்டாக பிளப்பதும் பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்றே கருதலாம்
நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கிய போது
அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது
அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது
இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை
எனவே அதற்க்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர்
காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) பல வருடங்களாக சொல்லப்பட்டு வந்தது தான் காரணம்
முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்
இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான. ஆதாரம் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டு பிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்
இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட ஆதாரங்களுடன் அப்போதே வெளிவந்தது
வானில் உள்ள நிலவில் ஒரு அற்புதத்தை இறைவன் நிகழ்த்தி காட்டினான் என்றால்
அதை அப்பகுதியில் வாழும் மக்கள் மட்டுமல்ல உலகின் பாதி இடங்களில் மனிதர்கள் பார்க்கும் வாய்புகள் அமைந்திருக்கும்
அப்படியொரு பாக்கியத்தை கண்கூடாய் பார்த்தவர்களில் ஒருவர் தான்
இந்தியாவில் ஆட்சிபுரிந்த சேரமன்னர்களில் ஒருவர்
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
சேரமான் பெருமாள்
சேரமான் பெருமாள் என்ற வார்த்தை கேரளாவையும் தமிழகத்தின் தென் பகுதிகளையும் ஆண்டு வந்த பல மன்னர்களுக்கு பொதுவாக சொல்லப்பட்ட வார்த்தையே தவிர
சேரமான் பெருமாள்
என்பது குறிப்பிட்ட காலம் ஆட்சி செய்த சில மன்னர்களையோ தனிப்பட்ட மன்னன் ஒருவரையோ குறிப்பிடுவதற்கு பயன் படுத்திய வார்த்தை இல்லை
கொடுங்கலூரில் அமையப் பெற்ற சேரமான் ஜீம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலை
கட்டுவதற்க்கு உத்தரவிட்டதாக சேரமன்னர்களில் ஒருவரான
பாஸ்கர ரவி வர்மா
என்பவரின் பெயரையே சொல்லப் பட்டு வருகின்றது
இது ஏற்புடையதல்ல
காரணம் நபியவர்கள் வாழ்ந்த காலம் கிபி ஆறாம் நூற்றாண்டு
பாஸ்கர ரவி வர்மா வாழ்ந்தது கிபி எட்டாவது நூற்றாண்டு என்றே சர்ச்சைகள் செய்யப்படுகிறது
காலத்தால் 200 வருடம் பிந்திய ஒருவர் நபி ( ஸல்) அவர்களை நேரடியாக சென்று சந்தித்தார் என்பதும்
அதே காலத்தில் கொடுங்கலூர் சேரமான் ஜீம்ஆ மஸ்ஜிதை கட்டினார் என்பதும் ஏற்க முடியாத வாதமாகும்
பாஸ்கர ரவி வர்மா ஆட்சிகாலத்திற்க்கு முன் சில சேர மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாறுகளில் பதிக்கப்பட்டுள்ளது
அவர்களின் பெயர்கள் தான் பதிக்கப்பட்டுள்ளதே தவிர
அவர்கள் ஆட்சி செய்த காலம் ஏதோ காரணங்களுக்காக
மறைக்கப்பட்டுள்ளது
அதற்கான காரணம் வரலாற்று விற்பன்னர்களால் இது வரை தெளிவாக்கப்படவில்லை
இதை காரணமாகவும் சாதகமாகவும் வைத்து தான் இஸ்லாமிய வரலாற்றை மூடி மறைத்த எதிரிகளோ
அல்லது பாஸ்கர ரவிவர்மாவின் மீது பக்தி கொண்ட பரம்ரைகளில் சிலர்களோ அவருடைய பெயரை முன்னிலை படுத்தியுள்ளனர்
கிபி 629- ல் கொடுங்கலூரில் அமைந்துள்ள சேரமான் ஜும்ஆ மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாலும்
அப்பள்ளியில் கல்வெட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருவதாலும்
அந்த காலத்தில் ஆட்சி செய்த சேர மன்னரே அதை கட்டியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருவதே இந்த ஒட்டு மொத்த வரலாற்று குழப்பத்திற்கு தீர்வாகும்
எனவே சேரமன்னர்களில் எந்த மன்னர் அதை கட்டினார் என்று சர்ச்சை செய்யாமல் சேரமன்னர்களில் பெயர் குறிப்பிட முடியாதே ஒருவரே அப்பள்ளியை கட்ட உத்தரவிட்டுள்ளார் என்று விளங்குவதே அறிவார்த்தமான முடிவாகும்
நாம் எழுதும் இந்த விளக்கமே சரியானது முறையானது என்பதால் தான்
பாஸ்கர ரவிவர்மாவை இத்தோடு சம்மந்தப்படுத்தும் கொடுங்கலூர் சேரமான் ஜீம்ஆ. மஸ்ஜித் நிர்வாகமே
அந்த பள்ளிவாசலின் நுழைவாயலில் சேரமான் மஸ்ஜித் என்றே இன்று வரை பெயர் வைத்துள்ளனர்
€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€
நபிகளாரும் சேரமான் பெருமாளும் சந்தித்து இருப்பதை
உறுதிபடுத்தும் இஸ்லாமிய
சான்று
ஹிஜ்ரி 321 வது வருடத்தில் பிறந்த முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்ற இமாம் ஹாகிம் ( ரஹ் ) அவர்கள் பல ஹதீஸ் கிதாபுகளை எழுதியுள்ளார்
அதில் ஒன்று தான் முஸ்தத்ரக் சஹீஹைன்
அந்த கிதாபில் உணவு என்ற பாடத்தில் ஒரு செய்தியை குறிப்பிடுகின்றார்
( மலிகுல் ஹிந்து ) இந்தியாவின் மன்னர்களில் ஒருவர் நபி ( ஸல் ) அவர்களை சந்தித்தார்
ஜாடியால் நிரப்பப்பட்ட இஞ்சி ஊறுகாயை நபியவர்களுக்கு அன்பளிப்பு செய்தார்
நபியவர்கள் அதை பெற்றுக் கொண்டு அனைவருக்கும் துண்டு துண்டாக பங்கு வைத்தனர்
எனக்கும் அதில் ஒரு துண்டை வழங்கினார்கள் என
அபூசயீதில் குத்ரி. ரலி. அவர்கள் அறிவித்தார்கள்
இந்த செய்தியில் நபியவர்கள் காலத்தில் இந்தியாவை ஆட்சி புரிந்த மன்னர்களில் ஒருவர் நபிகளார் வாழ்ந்த பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாக தெறிகின்றது
நெருப்பில்லாமல் புகையாது என்பதைப் போல இந்த சம்பவம் ஏதோ ஒன்றை மட்டும் உண்மைப் படுத்துகின்றது
அது என்ன என்பதைப் பற்றி முழு விபரங்கள் ஹதீஸ்களில் நேரடியாக காணப்படாவிட்டாலும்
சேரமன்னனைப் பற்றி சொல்லப்பட்டு வருகின்ற நம்பப் பட்டு வருகின்ற வரலாறுகள் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளது
ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள் திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள்
இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்
அப்போது சேர துறை முகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு
அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள்
அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும்
அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறை மறுப்பாளர்களை நம்ப வைப்பதற்காக இந்த நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூற கேட்டனர்
இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள்
அந்த அரபியார்களிடம் தானும் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும்
அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள்
ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப் படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம்
தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்
இஸ்லாத்தை ஏற்பதற்காக
தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள்
அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார்
(அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வசித்து வருகின்றனர்)
அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர்
அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள்
அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள்
மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப் பெற்றார்கள்
மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டு வந்த இஞ்சி ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்
சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார்
அதன் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான
மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல சஹாபாக்களை அழைத்துக் கொண்டு நாடு திரும்பினார்
ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலாலாஹ் துறைமுகத்தில்
(Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார்
அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது
மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது
அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள்
சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர்
அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும்
அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர்
அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மார்க்கத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது
அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில்
முதல் மசூதியை கட்டினார்
அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்
சேரமான் பெருமாள் மன்னரே இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்
சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதியாகும்
சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில்
(இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
சேரமான் பெருமாள் மற்றும் மாலிக் பின் தீனார் (ரலி) ஆகிய இருவரது சமாதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது
++++++++++++++++++++
கட்டுமான அமைப்பு
இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக. உள்ளது
இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி,
மற்ற உலக பள்ளிவாசல்களில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது
(ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது)
நபியவர்களின் காலத்தில் பள்ளிவாசலின் அமைப்பு இருந்தது போலவே
இதில் மனாரா (கோபுரம்)
அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை
மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது
பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது
இந்த மசூதி முகம்மது நபி (ஸல்) அவர்களிள் வாழ்ந்த காலத்திலேயே கட்டப்பட்டது
இது இன்றும் எல்லா மதத்தினரும் வந்து வழிபாடு செய்யும் ஒரு திருத்தலமாக உள்ளது
இன்றும் இந்த மசூதி சேரமான் பெருமாளின் வம்சத்தினராண கொச்சின் அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கிறது
மேலும் இங்கு உள்ள ரோஸ்வுட் சொற்பொழிவு மேடை
(மிம்பர் படி) கருப்பு மார்பில் கற்களும் மிகவும் பழமையானதாகும்
இதில் கருப்பு மார்பில் கற்கள் மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது
NB--- இஸ்லாமிய எதிரிகள் பல பள்ளிவாசல்களை அபகரிக்க நினைப்பதற்க்கு
அப்பள்ளிகளின் ஆவணங்கள் முறையாக பாதுகாக்கப்படாமல் இருப்பதே அடிப்படை காரணங்களாகும்
தனது இல்லத்தின் பாதுகாப்பை ஆவணங்களை பாதுகாக்க எந்தளவு சமுதாய மக்கள் கவனம் செலுத்துகின்றார்களோ
அதை விட பல மடங்கு கவனத்தை பழைமையான புதுமையான பள்ளிவாசல்களின் மீது செலுத்த வேண்டும்
என்ற அக்கரையுணர்வில் அதிக சிரத்துடன் நாம் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையே இது ! !
முடிந்த வரை இந்த வரலாறை பிறர் அறிய Share செய்யுங்கள்
مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَن يَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَىٰ أَنفُسِهِم بِالْكُفْرِ ۚ أُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وَفِي النَّارِ هُمْ خَالِدُونَ ﴿9:17﴾
குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை
அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ ﴿9:18﴾
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்
நட்புடன் . இம்தாதி
அனைவரும் அறிய வேண்டிய வரலாற்று பதிவு, சிறப்பான பதிவு
ReplyDeleteஜஷக்கல்லாஹ் ஹைர்
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஹிஜ்ரத் நடந்து கிபி 622 ல்.நிலவுபிள நடந்து ஹிஜ்ரத்திர்கு 5 ஆண்டு முன்மு என்று இதில் குறிப்பிடபட்டுள்ளது.அப்படியானாள் கிபி 616_617 ல் நடந்து இருக்கும்போது கபி 612 ல் இந்தியாவில் எப்படி மசூதிகட்டப்பட்டிற்கும்.ஹாஜாமுகைதீன் மகன் ஆஷிக் ரசூல்.
ReplyDeleteஆம் தாங்கள் குறிப்பிடும் தகவல் உண்மையே திருத்தம் செய்யப்பட்ட கட்டுரையை அப்லோட் செய்வதற்கு பதில் தொகுத்த கட்டுரையை அப்லோட் செய்யப்பட்டுள்ளது 629 என்பதற்கு பதிலாக 612 என்று அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது ஜசாகல்லா.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.இது கிபி 612 ல் கட்டப்பட்ட ஒரு கோயிலை சேரமன்னரின் வாரிசுதாரரின் அனுமதியுடன் மசூதியாக மாற்றி அமைத்திருக்களாம் அல்லவா.ஏனெனில் இதில் கிழக்கு நோக்கி இருந்ததை மேற்க்கு நோக்கி புதுப்பிக்கப்பட்டது என்றும் உள்ளது .கோயில்களில்தான் கிழக்கு நோக்கி வழிபடுவார்கள்.
ReplyDelete