ஆத்தீகம் நாத்தீகம்

!! கடவுளை அறிவோம் அறியாமை !!

          கலைவோம் !! 09-04 -2017
                கட்டுரை எண் 1078
                  -----------------------------
              J. யாஸீன் இம்தாதி
                       !+++++++++!
        Bismillahir Rahmanir Raheem
              !! -------------------------------!!

அறிவின் துணை கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று நினைப்பது தன்னம்பிக்கை

அதே நேரம் மனிதனின் அறிவையும் அறிவியலையும் தாண்டிய வல்லமை உண்டு என்று நம்புவதே ஆழமான இறை நம்பிக்கை

அந்த இறை நம்பிக்கையே அன்றாடம் நமது முன்னேற்றத்தின் தும்பிக்கை

கவலைகளின் தோல்விகளின் சாய்மானமும் அதுவே

கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றும் ஆன்மீக குருமார்கள் ஏராளம் இவர்களை நம்பி தன் சுயமரியாதையை தன்மானத்தை பொருளாதாரத்தை இழக்கும் பாமர மக்களோ தாராளம்

அதனால் தான் ஏக கடவுளும் கூட கடவுளர்களாக மனிதனின் கற்பனைகளில் எண்ணிக்கையில் பெருகி விட்டனர்

ஆனால் கடவுளுக்கு மனிதனை ஏமாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை

காரணம் நமது தேவைகளுக்கு அப்பாற்பட்டவனே கடவுள் என்று நம்புவதே அறிவுப்பூர்வமான இறை நம்பிக்கை

நம்மிடம் காணிக்கைகளை பெற்றுக் கொண்டு தான் கடவுள் நமது பிராத்தணையை ஏற்பார் என்றால் அந்த தேவையுடைய பிச்சைக்கார கடவுள் நமக்கு தேவை இல்லை

அதே போல் கடவுளின் ஆற்றல் இல்லாது நானாகவே தானாகவே தோன்றினேன் என்று வாதிடும் அறிவுக்கும் அறிவியலுக்கும் முரண்பட்ட நாத்தீக சிந்தனையும் தேவை இல்லை

காரணம் நாத்தீக சிந்தனையை கொண்டு சீர்த்திருத்தம் செய்வதை விட ஆத்தீக சிந்தனை கொண்ட சீர்திருத்தமே பல தீயவர்களை நல்லவர்களாக மாற்றி உள்ளது பல கொடை வள்ளல்களை மனித சமூகத்தில் உருவாக்கி உள்ளது

மனிதனை மனிதனாக நினைக்கவும் சேவைகளை ஆற்றவும் கடவுளை மறுத்து நாத்தீக சிந்தனையில் இருந்தால் தான் செயலாற்ற முடியும் என்று இல்லை கடவுளை அவன் தன்மைகளோடு சரியான முறையில் புரிந்தும் கூட செயலாற்ற முடியும்

    படைப்பினங்களை மதிப்போம்
         படைப்பாளனை மட்டுமே
                       துதிப்போம்

وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏ 

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன் அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும் என்னையே நம்பட்டும்

அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக

               (அல்குர்ஆன் : 2:186)

وَمَا لِىَ لَاۤ اَعْبُدُ الَّذِىْ فَطَرَنِىْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏ 

அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்

           (அல்குர்ஆன் : 36:22)

وَرَبُّكَ الْغَنِىُّ ذُو الرَّحْمَةِ ‌ اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْ بَعْدِكُمْ مَّا يَشَآءُ كَمَاۤ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّيَّةِ قَوْمٍ اٰخَرِيْنَ

‏  உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்று தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்

                (அல்குர்ஆன் : 6:133)

                நட்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்