இளம் பெண்களே ஆடவனுக்கு அடிமைகளாகாதீர்கள்

           !!  இளம் பெண்களே !!

   பெற்றோர்களுக்கு பிள்ளைகளாக
                       இருங்கள்

   ஆடவனுக்கு அடிமைகளாகாதீர்கள்

   <><><><><><><><><><><><><><>
                       27-01-2017
             கட்டுரை  எண்  1066
              -----------------------------
           J. யாஸீன் இம்தாதி
                   !+++++++++!
    Bismillahir Rahmanir Raheem
           !! -------------------------------!!
       
பெண் குழந்தை பிறந்த செய்தியை கேட்கும் பல பெற்றோர்கள் ஆண் குழந்தை பிறந்த செய்தியை கேட்கும் போது ஏற்படும் மகிழ்வை அடைவது இல்லை என்பது உண்மையே

அதனால் பெற்றோர்கள் அரக்கர்கள் என்று சொல்ல முடியாது காரணம் பெற்றோரில் ஒருவர் பெண் இனத்தை சார்ந்தவரே

கடந்த காலங்களிலே இது போன்ற சூழல் இருந்து என்று சொன்னால் அதற்க்கு சமூக கொடுமையான வரதட்சணை  என்பது மூல காரணமாக அமைந்து  இருந்தது

ஆனால் தற்காலத்தில் இஸ்லாமிய சமூகத்தில் வரதட்சணை எனும் கொடுமை சற்று நீங்கி இருந்தாலும் அதே போல் பய  உணர்வு பல பெற்றோர்களுக்கு இன்றும் உள்ளது என்று சொன்னால் அதற்க்கு மூல காரணம் இளம் பெண்களின் தற்கால அவலமான  நடைமுறையே

தெருவில் நான்கு முறை ஒரு ஆடவனை பார்த்து நேசித்த காரணத்தால் அல்லது பிற ஆடவர்களின் கவர்ச்சி பேச்சில் வீழ்ந்த காரணத்தால் இருபது வருடம் தாலாட்டி பாலூட்டி கண்ணும் கருத்துமாக வளர்த்திய பெற்றோரை  உதறி தள்ளி விட்டு அர்ப காமத்திற்காக வீட்டை விட்டு ஓடிப் போகும் சம்பவம் இன்று மிகைத்து விட்டது 

சமுதாயத்தை பற்றியோ தன் குடும்ப கண்ணியத்தை பற்றியோ எந்த வித சிந்தனையும் இல்லாத போக்கு இன்று அநேகமான இளம் பெண்களிடம் காணப்படுகிறது

அதிலும் குறிப்பாக ஓடி போகும் பெண்களில் அநேகர் குறுகிய மாதத்திலேயே யாருக்காக ஓடிப்போனாளோ அந்த ஆடவனை விட்டு மீண்டும் அழுது புலம்பி நாடகமாடி அவள் உதறிய தள்ளிய பெற்றோரிடமே தஞ்சமாகும் அவல நிலையும் தொடர் கதையாகி விட்டது

ஒரு பெண்ணை பெற்றதற்காக இது போல் மானக்கேடுகளையும் அவமானங்களையும் நாம் ஏன் சந்திக்க வேண்டும் என்ற அச்ச உணர்வே பெண்களின் பிறப்பை சமூகம் இழிவாகவும் பாரமாகவும் கருதுகின்றது

பெற்றெடுத்தவர்களுக்கு தனக்கு பொருத்தமான வரனை தேடி தரும் அக்கரையும் உண்டு என்பதை இளம் பெண்கள் உணர வேண்டும்

அந்நிய ஆடவர்களின் பார்வையில் நீங்கள் திருப்தியான ஆடையோடு தெரியும் காலம் வரை தான் நீங்கள் உலக அழகிகள்

அந்த ஆடையை விலக்கி என்றைக்கு நீங்கள் ஆடவனுக்கு முறையின்றி விருந்தாகின்றீர்களோ அந்த நிமிடம் முதலே  நீங்கள் ஆடவர்களின் பார்வையில் வேஷிகள் என்பதை மறவாதீர்கள்

ஆயிரம் பெண்ணிடம் ஒரு ஆடவன் தொடர்பு வைத்திருந்தாலும் அவன் தன்னை தூய்மையானவனாக சித்தரிக்கும் விதத்திலேயே ஆணிண் உடல் அமைப்பு அமைந்துள்ளது

அதே நேரம் ஒரே ஒரு ஆணோடு இளம்பெண் தவறான உறவு வைத்திருந்தால் கூட அவள் களங்கம் படிந்தவள் என்பதை அவளின் உடல் கூறுகளே வெளிச்சமாக்கி விடும்

எனவே ஒரு ஆடவனின் பார்வைக்கு நீங்கள் பெண்ணாக காட்சி தருவதில் பெறுமை கொள்வதை விட உங்கள் பெற்றோர்களின் பார்வைக்கு நீங்கள் கண்ணியமான பிள்ளையாக காட்சி தாருங்கள்

திருமணத்திற்க்கு பின் மணாளனின் மீது  உதிக்கும் தேடல் வெளிப்பாடு தான் காதலே தவிர திருமணத்திற்க்கு முன் ஒரு அந்நிய ஆடவனின் மீது எற்படும் ஈர்ப்பு என்பது  இன கவர்ச்சியும் காமமும் தான் என்பதை மறந்து விடாதீர்கள்

பெண்களின் விழி அசையாது எந்த ஆடவனும் வழி தவறுவது இல்லை பெண்களின் விழி அசைந்து விட்டால் எந்த வழிகேடுகளையும் தவறான சூழ்ச்சிகளையும் ஆடவன் புறக்கணிப்பதும் இல்லை

எனவே உடலுக்கு பர்தா எனும் ஆடையை அணிவதை விட உங்கள் மனதுக்கு இறையச்சம் எனும் பர்தா உடையை முதலில்  அணியுங்கள்

உண்ணும் வரையே வாழை இழைக்கு மதிப்பு உண்டு ஆனால் உணவை உண்டு விட்டாலோ  வாழை இழைகளும் குப்பை மேட்டில் தான் தெரு  நாய்களின் நாவுகளுக்கு ருசியாய் அமைந்து விடுகிறது

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‌‏ 

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்

(அல்குர்ஆன் : 16:58)

يَتَوَارٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖ  اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِى التُّـرَابِ‌  اَلَا سَآءَ مَا يَحْكُمُوْنَ‏ 

எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான்  அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்)

அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?

           அல்குர்ஆன் 10-59

            நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்