வீணாக்கப்படும் வரிப்பணம்
!!வீணாகும் வரிப்பணம்!!
சீரழியும் சிந்தனை மாற்றம்
+++++++++++++++++++++
ஒரு நாட்டின் வருமானம் அந்த நாட்டு குடிமக்களின் வறுமையை போக்கவும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் தான் பயன்பட வேண்டும் இதற்க்கு தான் வாங்கும் குடிமக்கள் வாங்கும் டூத் பேஸ்ட் முதல் அவர்கள் புதிதாக கட்டும் வீடு வரை அரசாங்கத்திற்க்கு சக்திக்கு மீறிய வரிகளை செலுத்தி கொண்டுள்ளனர்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதும் கீழ்பட்ட மக்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்க்கு வரிப்பணம் செலவு செய்யப்படுவதை யாரும் குறை காண இயலாது
அதே நேரம் இறந்து போன தலைவர்களுக்கு சிலை வைப்பதாலோ அல்லது மணிமண்டபங்கள் எழுப்புவதாலோ மக்களுக்கு என்ன பலன் அதனால் என்ன படிப்பினை ?
சிலைகளை எழுப்பி மத சண்டைகள் ஜாதி சண்டைகள் அரசியல் சண்டைகளை தவிர எந்த நன்மையும் மக்களுக்கு கிடைத்தது இல்லை
அதே போல் விளையாட்டு துறை என்ற ஒன்றை ஏற்படுத்தி வைத்து கொண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வாரி வாரி அவர்களுக்கு வழங்குவதில் என்ன நியாயம் ?
அவர்களை அரசாங்கத்தின் சார்பாக பாராட்டுவதும் தங்களது கட்சி நிதி மூலம் பரிசுகளை வழங்குவதும் யாராலும் குறை சொல்ல முடியாது
ஆனால் அதற்காக ஒவ்வொரு மாநிலமும் மூன்று கோடி என்றும் ஐந்து கோடி என்றும் அரசாங்கத்தின் சார்பாக வேலை வாய்ப்பு தரப்படும் என்றும் மற்றும் இடத்துடன் கூடிய வீட்டு மனை தரப்படும் என்றெல்லாம் வரிந்து கட்டி கொண்டு மக்கள் வரி பணத்திலிருந்து எந்த விதமான சிந்தனையும் இன்றி பரிசுகளை அறிவிப்பது எந்த விதத்தில் நியாயம் ? இந்த விளையாட்டு வீரர்களால் வெட்டி புகழை தவிர வேறு எந்த வகையில் நாட்டுக்கு நலன் குவிகிறது ?
படித்தவன் அரசாங்க வேலைக்கு கியூவில் பல மாதம் காத்திருக்கும் போது அதற்க்கு எவ்விதத்திலும் முயற்சி செய்யாத விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்க வேலையை கொடுப்பதில் என்ன அறிவார்த்தம் ?
அவர்கள் இது போல் போட்டியில் வெற்றி பெறுவதால் நடைமுறை ரீதியாக நம் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுள்ளது என்று விளையாட்டு துறை சார்பாக பட்டியல் போட முடியுமா ?
அல்லது நம் நாட்டுக்கு விளையாட்டு வீரர்களால் பொருளியல் ரீதியாக ஏதாவது வருமானமோ அல்லது இதர சலுகைகளோ நம் நாட்டுக்கு உலக அளவில் கிடைத்து கொண்டுள்ளதா ?
ஏழை மக்கள் பயன்படுத்தி வரும் அரசாங்க வாகனங்களில் ஓட்டைகளை அடைப்பதற்க்கு கூட ஆலோசனை கூட்டம் நடத்தும் அரசாங்கம் தெருக்களில் குப்பை கூளங்களை அன்றாடம் சுத்தம் செய்வதற்க்கு முயற்சி செய்யாத அரசாங்கம் நாட்டுக்கு அர்ப்பமான புகழ் என்பதை தவிர வேறு எவ்வித பலனையும் பெற்று தராத விளையாட்டு வீரர்களுக்கு பல ஆயிரம் கோடிகளை மக்கள் வரிப்பணத்திலிருந்து அள்ளி கொடுப்பது அவசியமற்ற வேலை
தனது உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதை தட்டி கேட்க துணிவு இல்லாத பொதுமக்கள் தனது அடிப்படை தேவைகளை கூட அரசாங்கம் நிறைவேற்றாத போது அதற்காக கொந்தளிக்காத நாட்டு குடிமக்கள் இதை பார்த்து அர்ப்பத்தனமாக மகிழ்ச்சி அடைவது அறிவீனமான செயல்பாடாகும்
இது போன்ற தேவையற்ற விசயங்களுக்கு மக்கள் வரி பணத்தில் இருந்து செலவுகளை செய்து மக்களின் அன்றாட தேவைகளுக்கு உலக வங்கியில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி மாநிலத்தை கடன்கார நாடாக மாற்றுவதும் அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றம் செய்வதும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது
உலகமே கோவனம் கட்டி சுற்றும் பொழுது நாம் அணிந்திருக்கும் நல்ல ஆடைகளை அவிழ்த்து அவர்கள் போல் கோவனம் கட்டி சுற்றுவதே நமது பெறுமை என்று கருதுவதை மக்கள் விடும் காலம் வரை
மக்களின் வரிப்பணம் இது போல் பயனற்ற விரயங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது
யாரோ ஒருவரின் சிலையை திறந்து வைப்பதற்க்கும் விழாக்களை எடுப்பதற்க்கும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்துவதை மக்கள் கைகழுவி விட்டு குறைந்தது தனது இன மக்களுக்கு போராடி இருந்தால் கூட நம் நாட்டில் கீழ்நிலை மக்கள் என்ற ஒரு சாரார் இருந்திருக்க வாய்ப்பில்லை
சிந்திப்போம் செயல்படுவோம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment