தட்சணை தர வேண்டியவர்கள்
உங்கள் கடையில் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை ஒருவர் வேலை செய்கிறார்
அவருக்கே மாத சம்பளம் தின சம்பளம் என்று தருகின்றீர்கள்
அதே நேரம் அந்த வேலைக்காரன் முதலாளி துணியை துவைக்க மாட்டான் முதலாளியின் குடும்ப வேலைகளை கவனிக்க மாட்டான் முதலாளியின் வீடு வாசல்களை கூட்டி பெருக்க மாட்டான்
இவர்களுக்கே மாத சம்பளம் தின சம்பளம் என்று பேரம் பேசுகிறீர்களே இந்த வேலைக்காரனின் பணியோடு ஒரு மனைவியின் பணியை ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறு பாடு உள்ளது
அப்படியானால் இப்போது சிந்தியுங்கள்
ஒரு ஆண் பெண்ணுக்கு வரதட்சணை தர வேண்டுமா அல்லது தியாகம் செய்யும் பெண்கள் வரதட்சணை தர வேண்டுமா
பெண் என்ற நிலையில் இதை யோசிக்காமல் மனைவி என்ற நிலையில் யோசியுங்கள் அப்போது புரியும் ஒவ்வொரு கணவனுக்கும் மனைவி தான்
தியாக செம்மல் என்று
அது பெண்ணை உயர்த்தி பேசும் பதிவு அல்ல
நியாயம் பேசும் பதிவு மட்டுமே
Comments
Post a Comment