மரபணு பசுக்கள்
சமூக வளைதளங்களில்
தேவையற்ற பத்வாக்களும்
!!! மரபணு பசு மாடும் !!!
||=============================||
11-03 -2017 கட்டுரை எண் 1074
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
சமூக வளைதளங்களில் காணும் தகவல்களை எல்லாம் ஆய்வு செய்யாமலும் அதன் நம்பகத் தன்மையை உறுதி படுத்தாமலும் மற்றவர்களுக்கு பரப்பும் மோசமான ஒரு குணம் தற்போது முஸ்லிம்களிடம் பெருகி இருப்பது வருத்தத்திற்க்குரிய நடவடிக்கை ஆகும்
அவ்வகையில் ஒன்றே பன்றியின் மரபணுவின் மூலமும் பசு மாட்டின் மரபணுவின் மூலமும் உருவாக்கப்பட்ட பசு எனும் வீடியோ பதிவாகும்
பார்வைக்கு இந்த பசுவின் முக ஜாடை பன்றி சாயலில் இருப்பதாலும் அதன் சதை பகுதி வேறுபாடாக இருப்பதாலும் அதை வெறுக்கும் முகமாக பரப்பட்ட தகவலே இது
இஸ்லாத்தில் பன்றி ஹராம் எனவே அந்த பன்றியின் மரபணுவின் மூலம் தயாரிக்கப்படும் பசு மாட்டின் பாலை அருந்துவதும் அதன் இறைச்சியை உண்ணுவதும் ஹராம் என்பதே தற்போது வாட்சப் மற்றும் சமூக வளைதளங்களில் பரப்பப்படும் தகவல் ஆகும்
ஆனால் இந்த கூற்றுக்கும் அந்த பசு மாடு உருவாக்கப்படும் விதத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை காரணம் இனம் வேறுபட்ட பசு மாட்டு இனங்களின் கலப்பு மரபணு மூலம் கண்டு பிடிக்கப்பட்ட உயிரிணமே இது மாறாக பன்றியின் மரபணுவிற்கும் இந்த பசு மாட்டிற்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை
இந்த பசுவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள லின்கை பார்வையிடும்
http://www.progressivegenetics.ie/Store/Detail/SERPENTIN-DAU-CHENE
இந்த தளத்தில் அந்த மாட்டின் விந்தணுவை விற்பனை செய்கின்றனர்
http://www.progressivegenetics.ie/Store/Detail/SERPENTIN-DAU-CHENE
++++++++++++++++++++++
இஸ்லாத்தை பொறுத்தவரை அடிப்படை ஹலாலாக எது உள்ளதோ அவைகளை கொண்டு அறிவியல் மூலம் உருவாக்கப்படுகின்ற எதையும் விரும்பினால் பயன் படுத்தி கொள்ளலாம் அதே நேரம் அதை உண்ணுவதின் மூலம் உடல் தீங்கு ஏற்படும் என்று அஞ்சினால் தவிர்ந்து கொள்ளலாம் அடிப்படை ஹராமாக எவை அமைந்துள்ளதோ அவைகளை கொண்டு அறிவியல் மூலம் உருவாக்கப்படுகின்ற எதையும் உண்ண கூடாது அது ருசியாக இருந்தாலும் சரியே இது தான் மார்க்க பார்வையே தவிர ஆள் ஆளுக்கு எவையெல்லாம் பிடிக்கவில்லையோ அவைகளை எல்லாம் மார்க்கத்தில் தடை என்று குருட்டு பத்வா கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
இயற்கை ரீயாக கிடைக்கும் ஹலாலான உணவு பொருளை தவிர செயற்கை முறையில் விஞ்ஞான துணை கொண்டு உருவாக்கப்படும் எந்த ஒன்றிலும் நலவுடன் சில தீங்குகள் இணைந்தே இருக்கும்
காரணம் இறைவனின் படைப்பு வேறு மனித அறிவின் மூலம் கண்டு பிடிக்கப்படும் பொருள்களின் தரம் வேறு இயற்கை முறையில் உருவாக்கப்படும் உரங்களை தான் விவசாயத்திற்க்கு பயன் படுத்த வேண்டும் என்றால் தற்போதைய ஜனத்தொகையில் உணவு பற்றா குறையும் விலைவாசியும் விண்ணை முட்டி நிற்க்கும் நாட்டு பசும் பாலை தவிர வேறு எந்த பாலையும் அருந்த கூடாது என்றால் விரைவில் பால் என்று சொல்லும் வெற்று வார்த்தை தான் சொந்தமாகும்
எனவே இயற்கை பொருள் கிடைக்கவில்லையா அல்லது இயற்கை பொருளின் விலையை கொடுக்க முடியவில்லையா செயற்கையாக கண்டு பிடிக்கப்படும் அடிப்படை ஹலாலான எதையும் உண்ணலாம் பருகலாம் என்பது தான் மார்க்க நிலைபாடாகும்
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكُمْ وَلَا تَعْتَدُوْا اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை
(அல்குர்ஆன் : 5:87)
وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 16:116)
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment