ஆண்களின் அந்தரங்கம்

        ஆண்களின் மறைவிடம்
               அல்லாஹ்வின்

           பேரருள் சிந்திப்பீர்

         ★-----★-----★-----★----★
                           22-11-15
      ஆக்கம் J.யாஸீன் இம்தாதி

      Bismillahir Rahmanir Raheem
                     ....................

மனிதனின் உடலில் வெளியில் தெரியக்கூடிய எல்லா உறுப்புகளும் மனிதன் வெளி உலகில் செயல் படும் விதமாக இறைவனால் துள்ளியமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது

இதயம் குடல் கிட்னி இது போல் உள்ள உறுப்புகளை பொருத்த வரை அதன் செயல் பாடுகள் உடலின் வெளி புறத்திற்க்கு தெரியும் விதமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை காரணம் அவைகள் வெளியில் இருந்தால் அவைகளால் பாதுகாப்பாக செயல் பட முடியாது அதனால் மனிதனுக்கும் அது இடையூராகவே அமைந்து விடும் என்பதும் இறைவனின் அழகான வடிவமைப்பாகும்

ஆனால் ஆண்களின் உடலின் வெளியில் இருக்கும் மர்ம பகுதியை பொருத்தவரை அது உடலின் உள் பகுதியில் இருந்து தேவையான நேரத்தில் மட்டும் வெளியில் இருந்து செயல் பட வைக்க இறைவனால் முடியும் ஆனாலும் வேண்டுமென்றே அந்த பகுதியை மட்டும் இறைவன் ஆண்களின் உடலின் வெளி பகுதியில் அமைத்துள்ளான்

மனிதனை போல் தகுந்த காரணம் இல்லாமல் இறைவன் எதையும் படைத்ததில்லை

அப்படியானால் ஆண்களின் மர்ம பகுதி மட்டும் ஆண்களிள் உடலின் வெளிப்பகுதியில் தெரியும் விதமாகவே இறைவன் படைத்ததின் காரணம் என்ன?
                        ------------

மனித உடலின் வெளிப்பகுதியில் இருக்கும் வெப்பத்தை விட மனிதனின் உள் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும்

உடலில் பொதுவாக இருக்கவேண்டிய வெப்பம் 36.9 செ (98.4F) ஆகும் ஆனால் உடம்பின் வெப்பம் நாள் முழுவதும் மாறிக் கொண்டே இருப்பதால் கிட்டத்தட்ட 36.7 செ (98.1F) முதல் 37.2 செ.மீ. (99.0F) வரை இருக்கலாம் என்று அறிவியல் ரீதியாக உடல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர் இதை விக்கிப்பீடியாவிலும் நீங்கள் பார்க்கலாம்

இதில் அளவான வெப்பத்தையும் மாறுதலுடைய வெப்பத்தையும் எதிர் கொள்ளும் அளவு ஆண்களின் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் இறைவனால் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது

ஆனால் ஆண்களின் மர்ம உறுப்பு மட்டும் எல்லா சூழல்களிலும் இதை தாக்கு பிடிக்கும் அளவு வலுவானதாக இறைவனால் அமைக்கபடவில்லை

காரணம் ஆண்களின் உடல் உறுப்புகளில் இந்த உறுப்பு மட்டுமே மிகவும் வலுவில் மெல்லிசானது கட்டியான எலும்புகளோ மெல்லிசான எலும்புகளோ இப்பகுதியில் இல்லை எனவே இதை உடலின் உள் பகுதியில் இறைவன் வைத்து இருந்தால் உடலின் உள் சூட்டிலே இருக்கும் வெப்பத்தால் இந்த உறுப்பு விரைவில் செயல் இழந்து விடும்

இந்த பகுதியில் தான் மனித சஞ்சாரத்தை உலகில் பெருக்கும் பாக்கியத்தையும் இல்லற வாழ்வின் சூட்சமத்தையும் இறைவன் அமைத்து இருப்பதால் அதை ஆண்களின் உடலின் உள் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கவும் வெளிப்புற காற்றோடத்தில் அந்த உறுப்பை அடிக்கடி படும் விதமாகவும் இறைவன் கட்டமைத்துள்ளான்

இது இறைவன் ஆண்களுக்கு செய்த பேரருளில் முக்கியமான ஒன்றாகும் 
                     ----------------
வேதனையான விசயம் என்னவென்றால் எந்த உறுப்பை இறைவன் வெப்பத்திலிருந்து காப்பாற்ற அழகிய முறையில் ஏற்பாட்டை செய்தானோ அந்த உறுப்பை  ஆடவர்களே அவர்களை அறியாமல் அதிகம் வெப்பத்தில் வைத்துள்ளனர் என்பது வேதனைக்குரிய விசயமாகும்

1-இறுக்கமான ஜட்டிகளை அணிவதும் எந்நேரமும் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதும் வெப்ப கதிரை வெளிப்படுத்துகின்ற லேப்டாப் போன்ற அறிவியல் சாதனங்களை தொடை மேல் நீண்ட நேரம் வைத்திருப்பதும் அந்த உறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆண்கள் உணர வேண்டும்

சாதா நேரங்களில் இறுக்கமான உள்ளாடை போடாதிருப்பதும் கைலி போன்ற காற்றோட்டம் எளிதாக புகும் ஆடைகளை அணிந்து இருப்பதும் மிக சிறந்ததாகும்

இல்லையானால் இல்லற வீரியத்தையும் குறைத்து குடும்ப வாழ்விலும் அதிருப்தியை கணவன் மனைவி அடையும் சூழல் ஏற்படும்

சுருங்க சொன்னால் அப்பகுதி ஆண்கள் உயிரணுக்களை பெற்று இருந்தும் இல்லற வீரிய அணுக்களை இழந்து விடும் சூழல் ஏற்படும் இதை தான் அநேக குடும்பத்தவர்கள் ஆண்மை இழப்பு என்று தவறாக விளங்கி தேவையற்ற சிகிக்சைகளை நோக்கி பயணிக்கின்றனர்

இயற்கை வழிகளை இயல்பாக பின்பற்றினாலே இது போன்ற பாதிப்புகளை மனிதர்கள் தவிர்க்க முடியும் இன்ஷா அல்லாஹ்

           நட்புடன் J.இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்